ஒரே நாளில் உச்சம் தொட்ட சீமானின் அந்தரங்கம் லண்டன் வரை சென்ற பரிதாபம் போலீஸ் வலைவீச்சு தெறித்து ஓடிய தம்பிகள் !

தஞ்சை.,

நேற்று சமூகவலைத்தள பக்கங்களில் சீமானின் முன்னாள் வலதுகரமாக செயல்பட்ட தனசேகருக்கும் தற்போதைய சீமானின் உதவியாளர் புகழேந்திக்கும் இடையே நடைபெற்ற உரையாடல்கள் இணையத்தில் படு வைரலாக பரவியது.

நேற்று ஒரே நாளில் மட்டும் 1 மில்லியன் பார்வையாளர்கள் அந்த ஆடியோவினை கேட்டுள்ளனர். ரிட்டயர்டு ரவுடி,மியாவ் மீம்ஸ், நாச்சியார் தமிழச்சி, வான் நிலா மற்றும் பல்வேறு ரஜினி ரசிகர்கள் மற்றும் பாஜக ஆதரவாளர்கள் உள்ளிட்ட பல பக்கங்கள் இந்த ஆடியோவினை வெளியிட்டிருந்தன.

தனசேகர் எனும் சீமானின் வலது கரமாக செயல்பட்டவருக்கு சீமான் குறித்த பல அந்தரங்க தகவல்களும், பணம் பெரும் வழிமுறைகளும் தெரியும் என்று கூறப்படுகிறது, அதனால் சீமான் தனசேகரை மலேசியா நாட்டிலேயே கொல்ல திட்டமிட்டதாகவும் தற்போது அவர் அதில் இருந்து மீண்டு இந்தியா வந்துள்ளதால் இங்கும் அவருக்கு நாம் தமிழர் கட்சியை சேர்ந்த திருச்சி பிரபு எனும் வழக்கறிஞர் கொலை மிரட்டல் விடுதிருப்பது சீமானை பின்பற்றும் நாம் தமிழர் கட்சியினருக்கே வெறுப்பினை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க:  எதற்கும் பெரியார் ராணுவம் தயார் H ராஜாவை குறிப்பிட்டு அறிக்கைவிட்ட வீரமணி அடுத்த சிலையும் காலி

இது குறித்து நாம் தமிழர் கட்சியை சேர்ந்த பலரும் சீமான் கட்சியை சாதி கட்சியாக மாற்று வடிவம் கொடுத்து வருவதாகவும், பணம் பெறுவது, கேள்விகேட்ட தம்பிகளை போஸ்டர் ஒட்டு என மிரட்டும் தொனியில் பேசுவது முகம் சுளிக்க வைத்திருக்கிறது.

சாதிகளை கடந்து சிந்திப்பதாக கட்சியை வழிநடத்தி தற்போது கட்சியின் முக்கிய பொறுப்பில் ஒரே சாதியை சேர்ந்தவர்களுக்கு அங்கீகாரம் கொடுப்பதாக குற்றசாட்டு சொந்த கட்சியினராலேயே முன்வைக்கப்படுகிறது.

இதனிடைய சீமான் கட்சியை சேர்ந்த லண்டனை சேர்ந்த சிவகுமார் என்பவர் தான் இதுவரை நாம் தமிழர்கட்சிக்கு கடந்த 5 ஆண்டுகளில் பல லட்சம் ரூபாய் எந்த பிரதிபலனும் இல்லாமல் அனுப்பிவைத்திருப்பதாகவும், இப்படி தனசேகரை மிரட்டும் சீமான் நாளை யாரைவேண்டுமானாலும் தனது சுயநலுனுக்காக மிரட்டலாம் எனது பணத்தினை திருப்பி அனுப்புங்கள் என்று சமூகவலைத்தள பக்கத்தில் வேதனை தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க:  மல்லையா நீரவ் மோடி குறித்து இனி வாயை திறக்கமாட்டார்கள் மதசார்பற்ற கூட்டணியை மூக்குடைத்த பானுகோம்ஸ்.

தற்போது திருச்சியை சேர்ந்த பிரபு என்பவரை காவலர்கள் கைது செய்திருப்பதாகவும் விரைவில் சீமானின் பல விடீயோக்கள் மற்றும் ஆடியோக்கள் அடுத்தடுத்து வெளியாக இருப்பதாகவும் இனியும் எங்களை தமிழர் தமிழர் என்று ஏமாற்ற முடியாது விரைவில் சீமான் எனும் கிறிஸ்தவர் கைதாவார் என்றும் தனசேகரன் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

இந்த ஆடியோ வெளியானதில் இருந்து சீமான் குறித்து பேச்சு எடுத்தாலே தம்பிகள் தெறித்து ஓட ஆரம்பித்துள்ளனர்.

©TNNEWS24

Loading...