பாஜக வெற்றிப்பெற்றால் தமிழகத்தை விட்டு வெளியேறுகிறேன் சீமான் சவால் !

பாஜக வெற்றிப்பெற்றால் தமிழகத்தை விட்டு வெளியேறுகிறேன் சீமான் சவால் !

அரியலூர்.

நாம் தமிழர்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர், சீமான் பாஜக மற்றும் அதன் தொண்டர்களுக்கு ஒரு சவாலை விடுத்துள்ளார், பாஜக தமிழகத்தில் வெற்றி பெற்றால் தான் தமிழகத்தை விட்டே வெளியேறிவிடுகிறேன் என்று கூறி இருக்கிறார்.

நேற்று நாம் தமிழர் கட்சியின் சிதம்பரம் நாடாளுமன்ற வேட்பாளர், சிவஜோதியை ஆதரித்து நாம் தமிழர்கட்சியை சேர்ந்த சீமான் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார், தமிழகத்தில் ஆண்ட கட்சிகள், ஆளும் கட்சிகள் யாருக்கும் மக்கள் மத்தியில் செல்வாக்கு இல்லை என்றும் தமிழர்கள் மாற்று சிந்தனைக்கு வந்துவிட்டதாக கூறினார்.

பிறகு முக ஸ்டாலின் குறித்து கடுமையான விமர்சனத்தை வைத்த அவர் ஸ்டாலின் துண்டு சீட்டினை பார்க்காமல் அரை மணிநேரம் பேச தகுதி இருக்கா என்று கேட்டார், அதன் பிறகு மதவாத பாஜக தமிழகத்திற்கு செய்யாத துரோகங்கள் இல்லை என்றும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அளித்ததே இந்த மத்திய அரசுதான் என்றும் குற்றம் சாட்டினார்.

இதையும் படிக்க:  சிவகங்கை தொகுதியை தவிர்த்து வேட்பாளர்களை அறிவித்தது காங். ராஜாவை எதிர்கொள்ள பயப்பிடுகிறதா காங்கிரஸ்.

அதன் பிறகு மீண்டும் பாஜக ஆட்சிக்கு வராது என்றும், தமிழகத்தில் பாஜக வெற்றிபெற்றால் தமிழர்கள் அனைவரும் வெளியேறும் சூழல் உருவாகும் என்றும் நானும் அவர்களுடன் வெளியேறுவேன் என்றும் அப்படி நடக்க வாய்ப்பில்லை என்றும் பாஜக வெற்றிபெற்றால் வெளியேறுவதாகவும், சவால் விடுத்துள்ளார்.

அந்த நாளுக்காக மே -23 வரை காத்திருப்பதாக பாஜக தொண்டர்கள் நாம் தமிழர் கட்சியினரை கலாய்த்து வருகின்றனர்

©TNNEWS24

Loading...