கட்சியை விட்டு நீக்கிய ஆடியோ தம்பியிடம் திருக்கழுக்குன்றத்தில் சிக்கிய சீமான் ! 5 கேள்விகளுக்கு பதில் சொல்லமுடியாத பரிதாபம்

கட்சியை விட்டு நீக்கிய ஆடியோ தம்பியிடம் திருக்கழுக்குன்றத்தில் சிக்கிய சீமான் ! 5 கேள்விகளுக்கு பதில் சொல்லமுடியாத பரிதாபம்,

திருக்கழுக்குன்றம்.,

கடந்த வாரம் சீமான் நெல்லையை சேர்ந்த தனது கட்சி நிர்வாகி ஒருவரை தொடர்புகொண்டு, தான் சொல்லியவருக்குத்தான் வேலை செய்யவேண்டும், அவருக்கு தான் சீட் கொடுப்பேன் உன்னால் முடிந்ததை பார்த்துக்கொள் என்று எச்சரித்தார்.

இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரல் ஆகவே நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக இருந்து கட்சியில் இருந்து வெளியேறிய வியனரசு செய்தியாளர்களை சந்தித்து, சீமானின் செயலை கண்டித்ததுடன், அவர் ராணுவத்தில் இருந்து பணியாற்றுவதற்காக நாம் தமிழர் கட்சியில் சேர்ந்தவர் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் சீமான் தலைமையில் திருக்கழுக்குன்றத்தில் பிரச்சார கூட்டத்தை தொடங்கினார் சீமான், பிரச்சாரத்தில் வீர உரை ஆற்றிக்கொண்டிருந்த சீமானுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது, திடீரென மேடையில் ஏறிய ஆடியோ வெளியிட்ட தம்பி, சீமானிடம் சில கேள்விகள் கேட்க முற்பட்டார் ஆனால் அவர் அதற்கு பதில் கொடுக்க மறுத்து உடனடியாக வெளியேறியுள்ளார்.

இதையும் படிக்க:  கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதியில் வெற்றி யாருக்கு தேர்தலுக்கு பிந்தைய பிரமாண்ட கருத்து கணிப்பு !

ஆனால் அவர் விடாமல் கூடி இருந்த நாம் தமிழர் கட்சியினரிடையே எழுப்பிய 5 கேள்விகள் இன்று பலரையும் யோசிக்கவைத்துள்ளது.

மாற்று அரசியலை முன்னெடுப்பதாக சொல்லி ஆரம்பித்த நாம் தமிழர் கட்சி இப்போது எந்த பாதையில் சென்றுகொண்டு உள்ளது.

1) நடிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்று சொன்ன நீங்கள் ஏன் நடிகர் மன்சூர் அலிகானிற்கு சீட் கொடுத்தீர்கள்.

2) குடும்ப அரசியலை ஒழிப்பதே நாம் தமிழரின் இலக்கு அப்படி இருக்கையில் உங்கள் மைத்துனர் அவர்களுக்கு விருதுநகரில் சீட் கொடுத்தது எதனால்.

3) திராவிடத்தை ஒழிப்பதே இலக்கு என்று சொல்லிய நீங்கள் திருமணம் செய்துகொள்ள ஒரு தமிழ் பெண் கூடவா இல்லை திராவிட பெண்ணை திருமணம் செய்தது எதனால்?

இதையும் படிக்க:  விஜய்யை மிகவும் கேவலமாக ஒருமையில் பேசிய சீமான் தற்போது நடப்பது என்ன?

4 ) காங்கிரஸ் கட்சியை அரசியலில் அழிப்பது என்ற ஒற்றை இலக்கை கொண்டதாக சொல்லி கட்சி ஆரம்பித்துவிட்டு இப்போது காங்கிரஸ் குறித்து வாய் திறக்காதது ஏன்?

5) இந்த முறை போட்டியிட தமிழர் அல்லாத பிறருக்கு 7 தொகுதிகளில் வாய்ப்பளித்தது எதனால் இதற்கு பதில் சொல்லுங்கள்.

இவ்வாறு அவர் கேட்கவே கூடி இருந்த நாம் தமிழர் தொண்டர்களே அதை ஏற்றுக்கொள்வதுபோல் அமைதியாக இருந்தது, சீமான் தவறு ஏதேனும் செய்துள்ளார் என்பது போலவே உணர்வதாக இருந்தது.

©TNNEWS24

Loading...