இஸ்லாமியர் சொத்துக்களை பறிமுதல் செய்யும் இலங்கை எத்தனை ஆயிரம் கோடி தெரியுமா ?

இலங்கை

கடந்த மாதம் 21 ஆம் தேதி ஈஸ்டர் பண்டிகையின்போது கிருஸ்துவ தேவாலயங்கள் உள்பட இலங்கையின் பல இடங்களில் தொடர் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதலில் 253 பேர் உயிரிழந்த நிலையில் பலர் படுகாயமடைந்தனர் இந்த தாக்குதலை தேசிய தவ்ஹீத் ஜமாத் என்ற இஸ்லாமிய அமைப்பும் ஐஎஸ் ஐஎஸ் பயந்தரவாத அமைப்பும் சேர்ந்து நடத்தியுள்ளது.

இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்லாமியர்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது இலங்கை அரசு அதில் முக்கியமானது இஸ்லாமிய பெண்கள் புர்கா அணிய கூடாது என்பது.

மேலும் இலங்கையின் பல இடங்களில் இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் நடந்து வருகிறது பல இடங்களில் இஸ்லாமியர்களின் கடைகள் மற்றும் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டு தீ வைக்க பட்டுள்ளது.

இதையும் படிக்க:  இன்று முதல் பர்தா அணிய அதிரடி தடை இஸ்லாமியர்கள் போர் கொடி , பாயும் தேச துரோக வழக்கு !

இந்த நிலையில் தான் இலங்கை குண்டு வெடிப்பில் சம்மந்தம் இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் இஸ்லாமியர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது இலங்கை அரசு.

கடந்த 2 நாட்களில் மட்டும் 14 ,000 கோடி மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது வரும் நாட்களில் இன்னும் பல்லாயிரம் கோடி மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள இஸ்லாமிய அமைப்புகள் இஸ்லாமியர்கள் நாட்டில் வாழ்வதா வேணாமா ? என்று கேள்வியெழுப்பியுள்ளனர்..

©TNNEWS24

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.

இதையும் படிக்க:  நான்காம் இடத்திற்கு முன்னேறிய இந்தியா பாகிஸ்தான் கற்றுக்கொள்ள வேண்டும்
Loading...