இலங்கை தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் ராகுல் காந்தியின் தொகுதியை சார்ந்தவர்கள் இலங்கை வெளியிட்ட பகீர் தகவல் !

கடந்த மாதம் 21 ஆம் தேதி ஈஸ்டர் பண்டிகையின்போது இலங்கையில் உள்ள சில தேவாலயங்களிலும் , நட்சத்திர உணவகங்களிலும் தொடர் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.

அதில் 253 பேர் உயிரிழந்தனர் 1500 -க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர், இந்த தாக்குதலுக்கு ஐஸ்ஐஸ் அமைப்பு பொறுப்பேற்றது மேலும் இலங்கையில் உள்ள தேசிய தவ்ஹீத் ஜமாத் என்ற அமைப்பிற்கும் இந்த தாக்குதலில் முக்கிய பங்கு உள்ளது.

இந்த தாக்குதலை தொடர்ந்து தனது விசாரணையை தீவிர படுத்தியது இலங்கை ராணுவம் மற்றும் புலனாய்வு அமைப்பு.

இன்று செய்தியாளர்களை சந்தித்த இலங்கை ராணுவ தலைவர் மகேஷ் சேனாநாயக் தாக்குதலை நடத்திய தீவிர வாதிகள் இந்தியாவின் காஷ்மீர் மற்றும் கேரள மாநிலம் வயநாட்டில் பயிற்சி பெற்றதாக தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க:  பாகிஸ்தானுக்கு ஆதரவாக பதிவிட்ட இந்தியர்களை காரி துப்பிய அபிநந்தன் !

மேலும் இப்படி ஒரு தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக இந்திய உளவுத்துறை முன்னரே தங்களை எச்சரித்ததாகவும் ஆனால் இந்திய உளவுத்துறை கொடுத்த தரவுகளும் , இலங்கை உளவுத்துறை கொடுத்த தரவுகளும் வேறு வேறாக இருந்ததால் தங்களால் சரியான நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்று கூறினார்.

மேலும் அவர் குறிப்பிட்ட தீவிரவாதிகள் பயிற்சியெடுத்த கேரளாவின் வயநாடு ராகுல் காந்தி போட்டியிடும் தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

©TNNEWS24

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.

Loading...