கடுமையாக கோவப்பட்ட ஸ்ரீனிவாசன் தெறிக்கவிட்ட பாஜக தொண்டர்கள் பத்திரிகையாளர் R.K முகத்திரை கிழிந்தது.

பிரபல தனியார் தொலைக்காட்சி வட்ட மேசைவிவாதம் என்ற பெயரில் சிறப்பு விவாதம் ஒன்றிணை நடத்தியது இதில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் செம்மலை, பாஜக சார்பில் பேராசிரியர் ஸ்ரீனிவாசன், காங்கிரஸ் சார்பில் ஜோதிமணி, பத்திரிகையாளர் ராதாகிருஷ்ணன் எனும் ஆர். கே, மக்கள் நீதிமய்யம் சார்பில், கவிஞர் சினேகன், அமமுக சார்பில் புகழேந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

விவாதம் மிகவும் காரசாரமாக நடந்துகொண்டிருந்தது, எப்போதும் அமைதியான முறையில் பேசும் ஸ்ரீனிவாசன் இந்த முறை வெளுத்து வாங்கிவிட்டார் குறிப்பாக நடுநிலை பத்திரிகையாளராக கலந்துகொண்ட ஆர். கே எப்போதும் பாஜக மற்றும் அதிமுக ஆகிய அரசுகளை மட்டுமே குற்றம் சுமத்தி பேசிவந்தார்.

இதனை தொடர்ந்து பாஜக தொண்டர்கள் மேடையை ரணகளமாக்கினார், ஒரு கட்டத்தில் பத்திரிகையாளர் ராதாகிருஷ்ணனை ஸ்ரீனிவாசன் கடுமையாக சாடினார், நீங்கள் உங்கள் பெயருக்கு பக்கத்தில் திமுக, காங்கிரஸ் ஆதரவாளர் என்ற போட்டுக்கொள்ளலாம் ஏன் நடுநிலையாளர்களை போல் மக்களை ஏமாற்ற பார்க்கிறீர்கள் என்று வெளுத்து வாங்கிவிட்டார்.

இதையும் படிக்க:  அம்மனை மேரிமாதாவாக மாற்றிய பூசாரி பக்தர்கள் திரண்டதால் ஓட்டம் !

இதனால் சற்று அமைதியானார் ஆர் கே. வழக்கமாக எங்கும் அமைதியாக இருக்கும் பாஜகவினர் இந்தமுறை மேடையை ரணகளமாகிவிட்டனர். ஸ்ரீனிவாசனின் குற்றசாட்டை தொடர்ந்து radhakrishnan RK எனும் அவரின் அதிகார பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தேடினால், அவர் திமுக ஆதரவாளராகவே மாறி இருப்பது தெரியவருகிறது.

©TNNEWS24

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.

Loading...