தேர்தலை காரணம் காட்டி ஆண்டாள் கோவிலில் தாமரை கோலத்தை அழித்த அதிகாரி ஒன்று சேர்ந்து ஊர் மக்கள் கொடுத்த பரிசு !

தேர்தலை காரணம் காட்டி ஆண்டாள் கோவிலில் தாமரை கோலத்தை அழித்த அதிகாரி ஒன்று சேர்ந்து ஊர் மக்கள் கொடுத்த பரிசு !

ஸ்ரீவில்லிபுத்தூர்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் தேர்தலை காரணம் காட்டி தாமரை கோலங்கள் சுண்ணாம்பு கலவைகளை கொண்டு அழிக்கப்பட்ட சம்பவம் இந்துக்கள் இடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல்கள் அறிவிக்கப்பட்ட நாட்கள் முதல் பொது இடங்களில் உள்ள கட்சியின் சின்னங்களை தேர்தல் நடத்தும் அதிகாரிகள் அழித்து வருகின்றனர், இந்த நிலையில் ஆண்டாள் கோவிலின் உள் உள்ள தாமரை விஷேக கோலங்களை தேர்தல் நடத்தும் அதிகாரி அளித்துள்ளார் கடவுள் நம்பிக்கையில் அரசு தலையிடுவது தவறு எனும் பட்சத்தில் இவர்கள் எப்படி இவ்வாறு நடந்து கொள்ளலாம் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதையும் படிக்க:  இராணுவ வீரர்களுக்கு உதவ களத்தில் இறங்கிய ரோகினி IAS 1.5 கோடி வசூல்!

இதேபோல் சர்ச் உள் இருக்கும் இயேசு சிலை கைகளை காட்டி காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டு கேட்பதுபோல் உள்ளது அதனை இவர்களால் நீக்கமுடியுமா, இல்லை மசூதிகளில் பறக்கும் பச்சை கொடி முஸ்லீம் லீக் கட்சியின் கொடிபோல் உள்ளது இவற்றை அவர்களால் அகற்ற முடியுமா என பக்தர்கள் கொந்தளித்துவருகின்றனர்.

கடவுள் நம்பிக்கையற்ற அதிகாரிக்கு கோவிலில் என்ன வேலை என்றும் கேள்வி எழுப்பிய அவர்கள் மீண்டும் தாமரை கோலத்தை அவர்கள் அதே இடங்களில் வரையும் வரை ஊர்மக்கள் அனைவரும் தங்கள் வீட்டு வாசலில் காலை, மாலை இரண்டு நேரங்களிலும் தாமரை கோலத்தை வரைவோம் என்று செயல்படுத்தி வருகின்றனர்.

இப்போது ஸ்ரீவில்லிபுத்தூரை தாண்டி தமிழகம் எங்கும் பெண்கள் தங்கள் வீட்டு வாசலில் தாமரை கோலத்தை வரைந்து எச்சரிக்கை செய்துவருகின்றனர்.

இதையும் படிக்க:  திருமாவளவன் எங்கள் ஊருக்குள் வரக்கூடாது விரட்டிய பொதுமக்கள்

ஒரு கோலத்தை அழித்த நாத்திக அதிகாரிக்கு அனைவரும் சேர்ந்து தங்கள் வீட்டு வாசலில் கோலமிட்டு ஒற்றுமையையும் எதிர்ப்பையும் பதிவு செய்து வருவது, எதிர்க்கட்சிகள் வயிற்றில் புளியை கரைத்துள்ளது.

மேலும் தாமரை கோலத்தை அழித்த அதிகாரிக்கு மூத்த பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

©TNNEWS24

Loading...