இந்தியாவில் முதல் முறையாக அமையப்போகிறதா பெடரல் அரசு? காங்கிரஸ் கூட்டணியை விட்டு தாவும் திமுக ,யார் பிரதமர் ?

மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுவரும் நிலையில் இதுவரை 6 கட்ட தேர்தல் முடிவடைந்துள்ளது 7 ஆம் கட்ட தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

மேலும் 23 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படும் நிலையில் அடுத்த 5 ஆண்டுகளுக்கு இந்தியாவை ஆளப்போவது யார் என்பது அன்று மாலை தெரியவரும்.

இந்நிலையில் காங்கிரஸ் , பாஜக அல்லாத 3 ஆவது ஆணியை உருவாக்கும் முயற்சியில் தெலுங்கானா முதல்வரும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் தலைவருமான சந்திரா சேகர ராவ் ஈடுபட்டுள்ளார்.

இதற்காக அவர் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து பேசினார், அப்போது மத்தியில் 3 ஆவது அணியான பெடரல் அணிக்கு ஆதரவு தரும்படி ஸ்டாலினிடம் வேண்டுகோள் விடுத்தார்.

இதையும் படிக்க:  மதம் மாறி திருமணம் செய்ததால் இன்றுவரை அனுபவிக்கிறேன் நீங்களும் அந்த தவறை செய்யாதீர்கள்- பைசல்தான் காரணம் மனம் நொந்த பாலாஜி

அப்போது காங்கிரஸ் கட்சி 180 இடங்களுக்கும் குறைவான இடங்களில் வெற்றிபெற்றால் தான் பெடரல் அணிக்கு ஆதரவு தருவதாக ஸ்டாலின் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பல நிறுவனங்கள் நடத்திய கருத்துக்கணிப்பின்படி காங்கிரஸ் 150 இடங்களை பெறுவதே கடினம் அதனால் ஸ்டாலின் நிச்சயம் பெடரல் அணிக்கு தாவிவிடுவார்.

பாஜகவும் 272 இடங்களுக்கு குறைவான இடங்களை பிடித்தால் பெடரல் அணி ஆட்சியமைக்க வாய்ப்பு உருவாகும் அப்படி பட்ட சுழலில் காங்கிரஸ் கட்சியிடம் பெடரல் அணிக்கு ஆதரவு கேட்டு பெடரல் அணி சார்பில் ஒருவர் பிரதமர் என்று சந்திரசேகர ராவ் கூறியுள்ளார்.

மேலும் இந்த சூழலில் ஒன்றுமட்டும் தெளிவாகியுள்ளது, அடுத்து 5 ஆண்டுகள் இந்தியாவை ஆள்வது ஒன்று பாஜகவாக இருக்கும் இல்லையென்றால் பெடரல் அணியாக இருக்கும்.

இதையும் படிக்க:  இந்தியாவுடன் போர் செய்து வெற்றிபெறும் நிலையில் நாங்கள் இல்லை அபிநந்தனையும் விடுவித்து விடுகிறோம் இம்ரான் கான் அறிவிப்பு.

காங்கிரஸ் ஆட்சியமைக்க சாத்தியக்கூறுகள் இல்லை என்றே சொல்லலாம் , பாஜக ஆட்சியமைத்தால் அது 5 ஆண்டுகள் நீடிக்கும் நிலையான ஆட்சியாக இருக்கும்.

பெடரல் அரசு அமைந்தால் அது கத்திமேல் நடப்பதுபோல எந்த நேரமும் என்னவேண்டுமானாலும் நடக்கலாம்.

©TNNEWS24
செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.

Loading...