இதுதான் ஸ்டாலின் சந்திரசேகராவை சந்திக்காததன் காரணமா?

இதுதான் ஸ்டாலின் சந்திரசேகராவை சந்திக்காததன் காரணமா?

சென்னை

திமுக தலைவர் ஸ்டாலின் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகராவை சந்திக்க மறுத்துவிட்டார் என்ற செய்தி தற்போது இணைய உலகில் பரபரப்பாக பேசப்படுகிறது, திமுகவினர் சந்திரசேகராவ் மோடியின் கூட்டாளி என்பதால் சந்திக்க மறுத்துவிட்டார் என்று எழுதி பாராட்டி வருகின்றனர்.

முன்பு சந்திரசேகராவ் தனது இல்லத்திற்கு வந்தபோது 64 வகையான விருந்து அளித்து கணவன் மனைவி இருவரும் ஒன்றாக அமர்ந்து பரிமாறினார்கள் மேலும் ராவின் அறிவுரையின் பேரிலேயே ஸ்ரீரங்கம் கோவிலுக்கு ஸ்டாலின் சென்றார், அப்படி நட்புடன் இருந்த ஸ்டாலின் ஏன் திடீரென சந்திக்க மறுத்தார் என்ற கேள்விக்கு விடைகிடைத்தது.

தற்போது இடைத்தேர்தல் முடிவுகள் எப்படி வேண்டுமானாலும், வரலாம் என்பதுதான் ஸ்டாலினின் கணக்கு அப்போது நிச்சயம் காங்கிரஸ் கட்சிக்கென்று 8 எம் எல் ஏ கள் உள்ளனர். அவர்கள் திமுகவிற்கு ஆதரவு இல்லை என்று நிலை எடுத்துவிட்டால் ஸ்டாலின் தலைகீழாக நின்றாலும் முதல்வர் ஆகமுடியாது.

இதையும் படிக்க:  4 வருட முடிவில் இதை நான் செய்வேன் அன்றே சொன்ன மோடி.. மகிழ்ச்சியில் பொதுமக்கள்!

ஸ்டாலின் சந்திரசேகராவை சந்திக்க நேரம் கொடுத்த நிலையில் டெல்லியில் இருந்து வந்த அழைப்பு மிரட்டலாக அமைந்திருக்கிறது, நீங்கள் ராவை சந்தித்தால் காங்கிரஸ் தினகரனுடன் பேசவும் தயங்கமாட்டோம் என்று செக் வைக்க பதறிப்போன ஸ்டாலின் உடனடியாக சந்திப்பை ரத்து செய்ததுடன் பதறிப்போய் டெல்லியை சமாதான படுத்த ஆள்களையும் அனுப்பிவைத்துள்ளாராம்.

நிலைமை இப்படி இருக்க எப்படி இருந்த திமுக இயக்கம் இன்று ஒரு தொலைபேசி அழைப்பிற்கு பதறிப்போய் மன்னிப்பு கேட்கும் அளவிற்கு சென்றுவிட்டதே என்று வருந்துகிறார்கள்.

இப்போ தெரியுதா ஸ்டாலின் ஏன் காங்கிரஸ் கட்சிக்கு 10 நாடாளுமன்ற தொகுதியை கொடுத்தார் என்று.

©TNNEWS24

Loading...