வக்கு இருக்கா திராணி இருக்கானு எல்லாரையும் கேக்குறீங்க இந்த 4 கேள்விக்கு பதில் சொல்ல உங்களுக்கு வக்கு இருக்கா ஸ்டாலின் வெளுத்து வாங்கிய ராஜா…

வக்கு இருக்கா திராணி இருக்கானு எல்லாரையும் கேக்குறீங்க இந்த 4 கேள்விக்கு பதில் சொல்ல உங்களுக்கு வக்கு இருக்கா ஸ்டாலின் வெளுத்து வாங்கிய ராஜா…

தேவகோட்டை.,

திமுக தலைவர் செல்லும் இடங்களில் எல்லாம் தற்போது திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சி இல்லை என்றும் எங்கள் வேட்பாளர்கள் ஆன்மீக வாதிகள் என்று சொல்லி வருகிறார். குறிப்பாக திமுக முன்னாள் அமைச்சர்கள் பலரும் தற்போது நாங்கள் கோவிலுக்கு செல்வதாகவும், இந்துக்களுக்கு எதிரி இல்லை என்றும் சொல்லிவருகிறார்கள்.

ஸ்டாலினின் இந்த அறிவிப்பிற்கு பாஜக தேசிய செயலாளரும், சிவகங்கை பாராளுமன்ற தொகுதியில், போட்டியிடும் H ராஜா ஸ்டாலினை நோக்கி சில கேள்விகளை முன்வைத்தார்.

அதில் தேர்தல் வந்துவிட்டால் ஸ்டாலின் எந்த மதத்தினருக்கும் எதிரியில்லை என்று சொல்லுகிறார் இதனை மக்கள் நம்புவார்களா என்று தெரியவில்லை சரி இந்த 4 கேள்விக்கு பதில் சொல்ல ஸ்டாலினுக்கு, வக்கு இருக்கா திராணி இருக்கா என்று அவரது பாணியில் திருப்பி கேட்டுள்ளார்.

இதையும் படிக்க:  பொங்கல் பரிசாக ரூ 1000 இலவசமாக கொடுக்கிறது அரசாங்கம் விஜய் ரசிகர்கள்….
  • இந்துக்களுக்கு எதிரி இல்லை என்று சொல்லும் ஸ்டாலின் ஏன் கிருஷ்ணர், குறித்தும் இந்துமத கடவுள்கள் குறித்தும் வன்மையாக பேசும் வீரமணியை கூட்டணியில் வைத்துள்ளார் அவரை விரட்டி விட முடியுமா?
  • சிறிது நாட்களுக்கு முன்னர் இஸ்லாமியர் கல்யாணத்திற்கு சென்ற நீங்கள் அங்கு இந்துக்களின் கல்யாண முறையை கிண்டல் செய்து பேசியதை பற்றி இப்போது உங்கள் கருத்து என்ன?
  • பல்லடத்தில் இந்துக்களின் புனிதமாக கருதப்படும் பெண்கள் பூப்படைதல் விழாவை கொச்சை படுத்தி பேசிய திருமாவளவனை கண்டிக்க திராணி இருக்கிறதா?
  • இவை அனைத்தையும் விட கிறிஸ்துமஸ், ரம்ஜான்க்கு வாழ்த்து தெரிவித்த உங்களால் வருகிற சித்திரை வருடப்பிறப்புக்கு வாழ்த்து சொல்ல வக்கு, திராணி எதாவது இருக்கிறதா?
இதையும் படிக்க:  இஸ்லாமியர்களின் மதவெறி கட்டுக்கடங்காமல் சென்றுகொண்டிருக்கிறது இது நாட்டிற்கு நல்லதல்ல - கார்ட்டூனிஸ்ட் பாலா

என்று வெளுத்து வாங்கி இருக்கிறார் H. ராஜா தற்போது இணையத்தில் பலரும், ராஜா முன்வைத்த கேள்விகளை கொண்டு வக்கு இருக்கா இல்லையா என திமுக தலைவர் ஸ்டாலினை நோக்கி கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

பதில் சொல்லுவாரா?

©TNNEWS24

Loading...