ஸ்டாலின் குடும்ப DNA குறித்து விளாசிய H.ராஜா ! திமுகவினர் கடும் அதிருப்தி

சமூகவலைத்தளம்.,

பாஜக தேசிய செயலாளர் H ராஜா செய்தியாளர்களை சந்தித்து அளித்த பேட்டி திமுக தொண்டர்கள் இடையே அதிருப்தியையும், பாஜவினர் இடையே வரவேற்ப்பையும் பெற்றுள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின், தி.க தலைவர் வீரமணி உள்ளிட்டவர்களை கடுமையாக சாடியுள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாலின் பிரதமர் மோடியை களவாணி என்று கூறியிருந்தார், சமூகத்தில் உயர் பொறுப்பில் உள்ள பிரதமரை, ஸ்டாலின் இப்படி பேசியது பலரும் கண்டனங்களை பதிவு செய்தனர். ஆனால் H ராஜா திமுக தலைவர் ஸ்டாலின் குடும்ப பாரம்பரியம், அரசியலில் வளர்ந்த விதம் ஆகியவற்றை சொல்லி வெளுத்து வாங்கிவிட்டார் குறிப்பாக இந்திரா காந்தியை தலையில் தடிகொண்டு அடித்துவிட்டு கீழ்த்தரமாக பேசிய DNA வில் வந்தவர்தான் ஸ்டாலின்.

இதையும் படிக்க:  ஒரே ஆட்களை வைத்து டபுள் ஆக்ட்டிங் கொடுத்த ஸ்டாலின் 200 ரூபாய்க்கு ஆட்களை வேலைக்கு வச்சா இப்படித்தான் இருக்கும் போட்டு உடைத்த கிருஷ்ணசாமி.

மேலும் ஈவேரா மற்றும் திமுக DNA- வில் வளர்ந்த ஒருவர் இப்படி பேசுவது ஆச்சர்யமில்லை, இனியும் ஸ்டாலின் போன்றோர் பிரதமரை தரக்குறைவாக விமர்சனம் செய்தால் சரியான பதிலடி கிடைக்கும் என்று வெளுத்து வாங்கிவிட்டார் ராஜா. மேலும் ஈவேரா, கருணாநிதி, அன்பழகன், வீரமணி வழிவந்த ஸ்டாலின் நாவினை அடக்கவேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் தான் ஏதாவது பேசினால் h ராஜா சர்ச்சை பேச்சு என்று 7 நாட்களுக்கு விவாதம் நடத்தும் ஊடகங்கள் ஏன் ஸ்டாலினின் பேச்சை பற்றி விவாதம் நடத்தவில்லை விலை போக்கிவிட்டிர்களா என்று ஊடகங்களையும் வெளுத்து வாங்கி இருக்கிறார் ராஜா, தற்போது ராஜாவின் இந்த பேச்சு திமுகவினர் இடையே அதிருப்தியையும், பாஜகவினர் இடையே வரவேற்ப்பையும் பெற்றுள்ளது.

இதையும் படிக்க:  தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட சமுத்திரக்கனி அப்போ இவரை பத்தி வந்த செய்தி எல்லாம் உண்மைதானா?

©TNNEWS24

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.

Loading...