துரைமுருகனை தொடர்ந்து சிக்கலில் தமிழச்சி தங்கபாண்டியன் சோதனையில் சிக்கியது ஆவணங்கள்

துரைமுருகனை தொடர்ந்து சிக்கலில் தமிழச்சி தங்கபாண்டியன் சோதனையில் சிக்கியது ஆவணங்கள்.

மேடவாக்கம்.,

திமுக சார்பில் தென்சென்னை நாடாளுமன்ற தொகுதியில் வேட்பாளராக போட்டியிடுபவர் முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசுவின் சகோதரி தமிழச்சி தங்கபாண்டியன்.

இவரை எதிர்த்து தென் சென்னை தொகுதியின் தற்போதைய எம்.பி ஜெயவர்தனன் போட்டியிடுகிறார், இவர் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது தேர்தல் பிரச்சாரம் உச்சக்கட்டத்தில் இருக்கும்போது திமுக பொருளாளர், துரைமுருகன் வீட்டில் சிக்கிய பணம் மூட்டைகள் திமுகவிற்கு மிக பெரிய பின்னடைவாக பார்க்கப்படும்பட்சத்தில் தற்போது தமிழிசை தங்கபாண்டியனும் சிக்கலில் சிக்கியுள்ளார்.

இன்று மேடவாக்கம் – ஆதம்பாக்கம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த தேர்தல் அதிகாரிகள் அந்த வழியாக வந்த காரினை வழிமறித்து சோதனை மேற்கொண்டபோது, அதில் கட்டு காட்டாக தென் சென்னை பகுதியை சேர்ந்த புதுவாக்காளர் அடையாள அட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையும் படிக்க:  காவலர்களை திருடன் என்ற ராகுல் நாங்கள் திருடர்களா நீங்களா? வெளுத்துவாங்கிய வாட்ச்மேன் மகள்கள் குவியும் பாராட்டு !

அதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அதனை எடுத்துவந்தவர்கள் திமுகவினர் என்பதும், அதில் திமுக வட்டசெயலாளர் திவாகரன் ஒருவரும் என்பதும், உறுதிப்படுத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் வாக்காளர் அடையாள அட்டை எவ்வாறு கிடைத்தது என்றும் கள்ள ஓட்டு போட இதனை அவர்கள் பயன்படுத்த இருந்தார்களா என்ற விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனால் தென் சென்னை தொகுதியின் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் சிக்கலில் மாறியுள்ளார். தொடர்ந்து திமுகவினர் அடுத்தடுத்து சிக்கலில் சிக்கியுள்ளதால் மக்கள் மத்தியில் இது என்னமாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரியவில்லை.

(கர்நாடகாவில் அப்பார்ட்மெண்ட் ஒன்றில் கட்டு காட்டாக வாக்காளர் அடையாள அட்டை கைப்பற்றபட்டதால் அந்த தொகுதியின் தேர்தலை ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது. )

இதையும் படிக்க:  வெளியானது உண்மை நேற்று ராகுல் பங்கேற்ற கல்லூரி நிகழ்ச்சியில் நடந்தது என்ன கல்லூரியில் பயிலும் மாணவியின் தந்தை விளக்கம் .

SOurce -polimer

©TNNEWS24

Loading...