பாஜக போட்டியிடும் 5 தொகுதிகளில் எத்தனை தொகுதிகளை கைப்பற்றும் பிரபல வெளிநாட்டு நிறுவனம் போல் ரிசர்ச் முடிவுகளை வெளியிட்டது .

பக்ரைன்.

நாளுக்கு நாள் இந்திய தேர்தல்களம் அடுத்தகட்டத்தை நோக்கி நகர்த்துள்ளது, தென் இந்தியாவில் தமிழகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் நாடாளுமன்ற தேர்தல் முடிந்துள்ள சூழலில் தற்போது சில கணிப்புகளை வெளியிட்டுள்ளது ‘போல் ரிசர்ச்சர் ‘ என்ற பன்னாட்டு அமைப்பு தென் இந்தியாவில் யார் எத்தனை தொகுதிகளை கைப்பற்றுவார்கள் என்று கணித்துள்ளது.

அதில் பாஜக போட்டியிடும் 5 தொகுதிகளுக்கான முடிவினை தற்போது பார்க்கலாம், தமிழகத்தை பொறுத்தமட்டில் கோவையில் பாஜக – கம்யூனிஸ்ட் கட்சிகள் மோதுகின்றன.
கன்னியாகுமரியில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் நேரடியாக மோதுகின்றன, இராமநாதபுரத்தை பொறுத்தமட்டில் பாஜக மற்றும் முஸ்லீம் லீக் கட்சிகள் களத்தில் போட்டியிட்டன.
சிவகங்கையில் காங்கிரஸ் மற்றும் பாஜகவும், தூத்துக்குடியில் திமுக மற்றும் பாஜக கட்சிகள்போட்டியிட்டன.

தமிழகத்தில் அதிக எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ள நட்சத்திர தொகுதிகளும் இவைதான். இவற்றில் வெற்றிவிகிதம் குறித்து போல் ரிசர்ச்சர் வெளியிட்ட முடிவுகளை பார்க்கலாம்.

கோவை

கோவையை பொறுத்தமட்டில் பாஜக கம்யூனிஸ்ட் கட்சியை குறைந்தது 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறும் என்று சொல்லியுள்ளது. இதற்கு காரணமாக பார்க்கப்படுவது கம்யூனிஸ்ட்களுக்கு தொழிலாளர்களை தாண்டி கோவை பொது மக்கள் மத்தியில் நம்பிக்கை இல்லை என்று குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிக்க:  விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை இழிவுபடுத்தும் திமுகவினர் கடும் அதிருப்தியில் தொண்டர்கள்.

வெற்றிவாய்ப்பு – 100%

இராமநாதபுரம்.

இராமநாதபுரம் தொகுதியை பொறுத்தமட்டில் இங்கு பாஜக – முஸ்லீம் லீக் மற்றும் சுயேச்சை வேட்பாளர் (அமமுக ) இடையே மும்முனை போட்டி நிலவுவதாகவும் பாஜக இராமநாதபுரம், மற்றும் பரமக்குடி சுற்றியுள்ள பகுதிகளில் அதிக வாக்குகளை பெரும் மற்றும் நடத்துற மக்கள் இந்த முறை பாஜகவை ஆதரித்திருப்பதும் அந்த தொகுதியின் பாஜக வெற்றி பெரும் என்று சொல்லி இருக்கிறது.

இங்கு பாஜக வேட்பாளர் 8 ஆயிரம் முதல் 10000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவார் என்று சொல்லியுள்ளது.

வெற்றிவாய்ப்பு – 70 %

கன்னியாகுமரி

கன்னியாகுமரியை பொறுத்தமட்டில் சிட்டிங் எம். பி பொன்ராதாகிருஷ்ணன் வளர்ச்சி பணிகளை செய்திருந்தாலும் இங்கு மத ரீதியாகவே வாக்குகள்l பதிவாகியுள்ளன, இங்கு பாஜக வெற்றி வாய்ப்பு உறுதி படுத்தமுடியாத சூழலிலேயே இருப்பதாகவும், கன்னியாகுமரியை பொறுத்தமட்டில் கிறிஸ்தவர்கள் வாக்குகள் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சீமானுக்கு 40 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் சென்றால் மட்டுமே பாஜக வெற்றிபெற வாய்ப்புகள் இருப்பதாக தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க:  பினராய் விஜயனின் இந்த செயல் மக்களிடம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது!

கன்னியாகுமரி பாஜக வெற்றி வாய்ப்பு – 50%

சிவகங்கை

தமிழகத்தில் அதிகம் எதிர்பார்த்துள்ள சிவகங்கை தொகுதியில் பாஜக மற்றும் அதிமுக வாக்குகளை அமமுக வேட்பாளர் பாண்டி கணிசமாக பிரித்திருக்கிறார் தினகரனின் வேட்பாளர் பாண்டி 1.5 லட்சம் வாக்குகளுக்கு மேல் பெற்றால் அது பாஜகவிற்கு எதிராகவும், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாகவும் செல்லும் என்றும் சொல்லி இருக்கிறது.

சிவகங்கையில் தற்போது காங்கிரஸ் கட்சிக்கு சாதகமான சூழல் இருப்பதாகவும் பாஜகவிற்கு வெற்றி வாய்ப்பு குறைவாக இருப்பதாகவும், தினகரனின் வேட்பாளர் ஒரு லட்சம் வாக்குகளுக்கு குறைவாக பெற்றிருந்தால் மட்டுமே ராஜா வெற்றிபெறுவார் என்று கணித்துள்ளது.

சிவகங்கை பாஜக வெற்றி வாய்ப்பு – 41%

தூத்துக்குடி.

தூத்துக்குடியில் அதிகம் மக்கள் ஸ்டெரிலைட் விவகாரத்தில் மத்திய அரசு சுயநலமாக நடந்துகொண்டதாகவும், கிறிஸ்தவர்கள் வாக்குகள் பாஜகவிற்கு விழுக்காததும் தமிழகத்தில் பாஜக போட்டியிடும் மற்ற 4 தொகுதிகளை விட குறைவான பலமே பாஜகவிற்கு இங்கு உள்ளதும் தமிழிசைக்கு எதிராக திரும்பியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிக்க:  கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதியில் வெற்றி யாருக்கு தேர்தலுக்கு பிந்தைய பிரமாண்ட கருத்து கணிப்பு !

மேலும் கடைசி நேரத்தில் பணம் அதிக அளவு எதிர்க்கட்சி வேட்பாளரால் கொடுக்கப்பட்டிருப்பதும் இவற்றுக்கு எதிராக சென்றுள்ளது என்றும், தமிழகத்தில் தூத்துக்குடி தொகுதி திமுக வசமே செல்லும் என்று கணித்துள்ளது.

தூத்துக்குடி பாஜக வெற்றிவாய்ப்பு -33%

இவ்வாறு பாஜக கோவை, இராமநாதபுரம் தொகுதிகளை கைப்பற்றும் என்றும் கன்னியாகுமரியில் இழுபறியாகவும். சிவகங்கை மற்றும் தூத்துக்குடி தொகுதிகளை எதிர்க்கட்சிகள் கைப்பற்றும் என்று சொல்லியுள்ளது பக்ரைனை சேர்ந்த ‘போல் ரிசர்ச்சர்’ நிறுவனம்.

ஆனால் பாஜகவினரோ அனைத்து 5 தொகுதிகளையும் நிச்சயம் பாஜக வெல்லும் என்றும் எதிர்கட்சிகளோ பாஜக நிச்சயம் எங்கும் வெற்றிபெறாது என்றும் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

அடுத்த பதிவுகளில் கேரளாவில் பாஜக எத்தனை தொகுதிகளை கைப்பற்றும் என்று ‘போல் ரிசர்ச்சர்’ வெளியிட்ட கணிப்புகளை வெளியிட இருக்கிரோம் தொடர்ந்து இணைந்திருங்கள்.

©TNNEWS24

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று மெசேஜ் அனுப்பவும்.

Loading...