காவி மயமான தமிழகம் ஒன்று சேர்ந்து சத்தியம் செய்த பல ஆயிரம் தமிழர்கள். சோ சொன்னது நடந்தே விட்டது.

காவி மயமான தமிழகம் ஒன்று சேர்ந்து சத்தியம் செய்த பல ஆயிரம் தமிழர்கள். சோ சொன்னது நடந்தே விட்டது.

சமூக வலைத்தளம்.,

தமிழகத்தில் சில நாட்களாக எதிர்க்கட்சிகள் மற்றும் சில அமைப்புகள் தொடர்ந்து நாங்கள் இந்துக்களுக்கு எதிரான கட்சியில்லை என்று சொல்லி கொண்டிருக்கின்றன.

ஆனால் அவர்களின் கடந்தகால வரலாறுகள் மக்கள் மத்தியில் அவர்களுக்கு நம்பிக்கையை கொடுக்கவில்லை, குறிப்பாக தற்போது தேர்தல் நேரம் என்பதால் எங்கு இந்துக்கள் விழித்துக்கொண்டால், நாம் வெற்றிபெற இயலாது என்ற ஒரு பயத்தின் காரணமாகவே, ஸ்டாலின் போன்றோர் இதுபோன்ற அறிக்கைகளை கொடுப்பதாகவும் இந்துக்கள் நினைப்பதாக சொல்லப்படுகிறது.

சரியாக சிறிது நாட்களுக்கு முன்னர்தான் முஸ்லிம் மணமக்களுக்கு திருமணம் செய்து வைத்துவிட்டு அந்த விழாவில் இந்துக்களின் திருமணத்தை சர்ச்சையாக விமர்சனம் செய்திருந்தார். அதனை பலரும் கண்டித்தனர் சமூகவலைத்தளங்களில் கடுமையான கண்டனங்கள் எழுந்தவண்ணம் இன்றுவரை தொடர்கிறது.

இதையும் படிக்க:  அஜித்தை கம்பி என்ன வைக்காமல் விடமாட்டோம் விடுதலை சிறுத்தைகள் எச்சரிக்கை !

ஆனால் அங்கு பேசிவிட்டு இப்போது நான் இந்து மதத்திற்கு எதிரானவர்கள் இல்லை என்றும் சொல்லி இருக்கிறார், இதனை மக்கள் நம்புவார்களா என்று தெரியவில்லை. இந்த சூழலில் தமிழகத்தில் பல ஆயிரம் மக்கள் ஒன்றிணைந்து சத்தியம் ஒன்றினை செய்துள்ளனர்.

அதில் எங்கள் மதத்தினை விமர்சனம் செய்தவர்கள், மற்றும் அவர்களுக்கு துணை போனவர்கள் அவர்களை கண்டிக்காத எந்த அரசியல் கட்சிக்கும் வாக்கு அளிக்கமாட்டோம் என்று சத்தியம் செய்திருக்கிறார்கள்.

இது இந்திய அளவில் தலைப்பு செய்திகளில் இடம்பிடித்துள்ளது ஆனால் தமிழக ஊடகங்கள் இதனை ஒரு செய்தியாக கூட மக்கள் மத்தியில் தெரியப்படுத்தவில்லை.

துக்ளக் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் ‘சோ ‘ பல ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு தகவலை சொல்லி இருந்தார், தமிழகத்தில் இந்துக்கள் வாக்கு வங்கி மட்டும் உருவாகிவிட்டால் போதும், தமிழகத்தை சேர்ந்த அரசியல்வாதிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து காலை, மாலை கோவிலுக்கு செல்வேன் எங்களுக்கு வாக்கு அளியுங்கள் என்று பஜனை பாட ஆரம்பித்துவிடுவார்கள் என்றார்.

இதையும் படிக்க:  ஜேம்ஸ் பாண்ட் பட வசனம் பேசி ராகுலுக்கு பதிலடி கொடுத்த அருண் ஜெட்லீ !

இன்று அதுபோல ஒரு சூழல் உருவாகிவிட்டது, குறிப்பாக அமைதியாக இருந்த மக்கள் வீதிக்கு வந்து எதிர்ப்பை தெரிவிக்க ஆரம்பித்துவிட்டனர். அதோடு நில்லாமல் எதிர்வினைகளும் ஆற்ற ஆரம்பித்துள்ளனர். இதனை வைத்து பார்க்கும் போது தமிழகத்தில் இந்துக்கள் வாக்கு வங்கி வருகின்ற தேர்தலில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாக இருக்குமோ என்ற அச்சம் எதிர் கட்சிகள் மத்தியில் பரவலாக எழத்தொடங்கியுள்ளது.

©TNNEWS24

Loading...