தம்பித்துரை விவகாரம் அசிங்கப்பட்ட ஜோதிமணி செய்த கீழ்த்தரமான காரியம் அம்பலம்

தம்பித்துரை விவகாரம் அசிங்கப்பட்ட ஜோதிமணி செய்த கீழ்த்தரமான காரியம் அம்பலம்.

கரூர்.,

கரூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஜோதிமணி சமூகவலைத்தளத்தில் தம்பித்துரை பேசியதாக ஒரு பொய் தகவலை வெளியிட்டிருந்தார்.

நான் கரூரில் தோல்வி அடைந்தால் அதற்கு காரணம் பாஜகவுடன் கூட்டணி வைத்ததுதான் என்று தம்பி துரை சொல்லியதாக, தனியார் தொலைக்காட்சி பெயரில் செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

அந்த தகவல் முழுவதும் போலியானது, தம்பிதுரை அப்படியானா ஒரு செய்தியை சொல்லவே இல்லை, எப்படியாவது வெற்றிபெறவேண்டும் என்று இது போன்ற கீழ்த்தரமான செயலில் ஜோதிமணி இறங்கியுள்ளதாக அதிமுகவினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

அனைத்து கூட்டணி கட்சியினரும் ஒற்றுமையாக வேலை செய்து வெற்றிக்கு உழைத்துக்கொண்டிருப்பதனால், பதற்றத்தில் ஜோதிமணியே இதுபோன்ற பொய் தகவலை பரப்பி வருவதாக தம்பிதுரை தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிக்க:  2019 தேர்தலில் மீண்டும் மோடியே வெற்றிபெற வேண்டும் முலாயம் சிங் யாதவ் பேட்டி , உபி யில் பரபரப்பு ..!

தன்னை மிகவும் நியாயவாதி போல் காட்டிக்கொள்ளும் ஜோதிமணி இப்படி ஒரு காரியத்தை தோல்வி பயத்தினால் வெளிப்படுத்தியுள்ளாரா? இல்லை ரபேல் குறித்து ராகுல் கிளப்பும் பொய்களை போல இவரும் அதே பாணியில் இறங்கியுள்ளாரா என தெரியவில்லையே? என பாஜகவினர் கேள்வி எழுப்புகின்றனர்.

அனைவரும் இது போலி என ஜோதிமணியை வறுத்து எடுக்க போலி படத்தினை நீக்கிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சில நாட்களுக்கு முன்னர் ஜோதிமணி பாஜகவினை போட்டோ சாப் கட்சி என கிண்டல் செய்தது குறிப்பிடத்தக்கது.

Credit – K.k madurai

©TNNEWS24

Loading...