மாணவர்களை வெற்றிபெறவைக்க வக்கில்லை சம்பளஉயர்வு தேவையா விழுப்புரத்தில் தரமான சம்பவம்

அரசு ஆசிரியர்களை பேனர் அடித்து அசிங்கப்படுத்திய சமூக ஆர்வலர்

கடந்தவாரம் வெள்ளிக்கிழமை பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை தமிழக அரசு வெளியிட்டது

இதுவரை 1200 மதிப்பெண்களுக்கு தேர்வு முடிவுகளை அறிவித்துவந்த அரசு இந்த ஆண்டு முதல் 600 மதிப்பெண்களுக்கு முடிவுகளை அறிவித்துள்ளது

அந்த முடிவுகளின் படி திருப்பூர் மாவட்டம் 95.37 சதவீதம் தேர்ச்சியுடன் தமிழகத்தில் முதலிடம் பிடித்துள்ளது அதை தொடர்ந்து ஈரோடு மாவட்டம் 95.23 சதவீதம் தேர்ச்சியுடன் இரண்டாமிடம் பிடித்துள்ளது

இதில் மிக குறைவான தேர்ச்சிவிகிதம் பெற்று கடைசி இடங்களில் உள்ளது விழுப்புரம் மாவட்டம்.

இப்படி விழுப்புரம் மாவட்டம் கல்வியில் கடைசியில் இருப்பதை பொறுத்துக்கொள்ள முடியாத சமூக ஆர்வலர் ஆர் ஜோதிஜாஷ்வா ராஜன் என்பவர் விழுப்புரம் நகரில் ஆங்காங்கே பேனர்களை அடித்து வைத்துள்ளார்.

இதையும் படிக்க:  ஸ்டாலின் சொன்ன பொய்களிலே இதுதான் டாப் அசிங்க படுத்திய கிருஷ்ணசாமி

அதில் விழுப்புரம் மாவட்டத்தை தொடர்ந்து கல்வியில் கடைசி இடம் கிடைக்க உறுதுணையாக இருந்த அரசு சலுகைகளுக்காக போராடிய ஆசிரியர்கள் மற்றும் கல்வி துறை அதிகாரிகளுக்கு நன்றி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சரியாக பொதுத்தேர்வுக்கு 2 மாதங்களுக்கு முன்பு அரசு ஆசிரியர்கள் சலுகைகள் மற்றும் சம்பள உயர்வுக்கேட்டு போராடினர்.

கிட்டத்தட்ட 10 நாட்கள் போராடிய அவர்கள் பலமில்லாத அரசு தங்கள் வலிக்குவரும் என்று நினைத்தனர் ஆனால் உறுதியாக நின்ற அரசு ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை விடுத்தது.

அதைத்தொடர்ந்து அரசிடம் பணிந்த ஆசிரியர்கள் மீண்டும் வேலைக்கு திரும்பினார் இதனால் பொதுத்தேர்வுக்கு முன் ஒரு 2 வாரகாலம் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டது.

இதனை கருத்தில்கொண்டு விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் இப்படி ஒரு பேனரை அடித்து வைத்துள்ளார்.

இதையும் படிக்க:  பாண்டே மற்றும் TNNEWS24 இணையதளத்தை கடுமையாக கண்டித்த வீரமணி காரணம் என்ன?

அவர் தங்களை அவமானப்படுத்தி விட்டதால் அவர் மீது வழக்குதொடர போவதாக விழுப்புரம் மாவட்ட அரசு பள்ளி ஆசிரியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதேபோல தமிழகத்தில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் 98 .2 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில் தமிழக அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் 84.6 சதவீதம் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர் தனியார் பள்ளி ஆசிரியர்களை விட 5 மடங்கு அதிக ஊதியம் பெரும் அரசு பள்ளி ஆசிரியர்களின் தகுதி இவ்வளவுதானா?

விழுப்புரத்தில் மிக பெரிய அளவில் சம்பள உயர்வு கேட்டு ஆசிரியர்கள் போராடியது குறிப்பிடத்தக்கது.

©TNNEWS24

Loading...