இராமநாதபுரத்தில் தீவிரவாதிகள் குறிவைத்துள்ள 3 இடங்கள் இவைதான் இரவு முழுவதும் கியூ பிரிவு போலீசார் சோதனையில்

இராமநாதபுரத்தில் தீவிரவாதிகள் குறிவைத்துள்ள 3 இடங்கள் இவைதான் இரவு முழுவதும் கியூ பிரிவு போலீசார் சோதனையில்

இராமநாதபுரம்.,

இராமநாதபுரம் மாவட்டத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும், 19 தீவிரவாதிகள் ஊடுறியிருப்பதாகவும் பெங்களூரு காவல்துறையினர், தமிழக காவல்துறையினருக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

இலங்கையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 270 கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் பலியான சூழலில், சென்சிட்டிவான பகுதியான ராமநாதபுரத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினால் அது மாநிலம் முழுவதும் மிக பெரிய மதக்கலவரத்தை உருவாக்கும், என்று தீவிரவாதிகள் கணக்கிட்டு இதுபோன்ற செயல்களில் ஈடுபட இராமநாதபுரத்தை தேர்வு செய்து இருப்பதாக தெரிவிக்கின்றனர்.

தீவிரவாதிகளை அடையாளம் காணும்பொருட்டு நேற்று (27/04/19) இரவு முழுவதும் அனைத்து தங்கும் விடுதிகள், இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் சோதனையை மேற்கொண்டனர், குறிப்பாக இராமேஸ்வரம் பாலம் தொடங்கி அனைத்து இடங்களும் போலீசார், கியூ பிரிவு போலீசார், உளவு அமைப்பினர் சல்லடையாக சோதனைகளை மேற்கொண்டனர்.

இதையும் படிக்க:  புதுச்சேரி தொகுதியை கைப்பற்றப்போவது யார் ?

தீரவிரவாதிகளின் குறியில் முதலாவதாக இராமேஸ்வரம் கோவில் இருக்கிறதாம் ஒட்டு மொத்த இந்துக்களின் அடையாளமாக இருக்கும் கோவிலில் வெடிகுண்டு தாக்குதல்களை நிகழ்த்தினால் அது இந்தியா முழுவதும் எதிரொலிக்கும் என்றும் கணக்கிட்டிருக்கிறார்கள்.

இரண்டாவதாக தேவிபட்டினம் பகுதியிலும், அழகன்குளம் முதல் சித்தார்கோட்டை பகுதிகளில் அதிகமான அளவில் உள்ள இந்துக்கள் வசிக்கும் பகுதியினை தீவிரவாதிகள் குறிவைக்க வாய்ப்பு இருப்பதாக கோப்பேறிமடம் செக் போஸ்டில் தீவிரமான வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர், மேலும் வெளிநபர்கள் யாரேனும் அடையாளம் தெரிந்தால் போலீசாருக்கு தெரியப்படுத்தவும் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

மூன்றாவதாக மக்கள் கூடும் அதிக இடங்களான இராமநாதபுரம் அரண்மனை மற்றும் சந்தை பகுதிகளை தீவிரவாதிகள் குறிவைத்திருப்பதாகவும் உளவு அமைப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அமைதியான முறையில் இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்கள் வாழும் பகுதிகளில் தீவிரவாதிகள் தாக்குதல் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்தால் அது இராமநாதபுரத்தில் வசிக்கும் சிறுபான்மையினருக்கு மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தலாம் என்று பலரும் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க:  உஷார் நிலையில் இந்திய கடற்படை , கடல்வழியாக நுழைந்து தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டம்

©TNNEWS24

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.

Loading...