இதுக்குமட்டும் கத்துதா அந்த பல்லி திருமாவளவனை கிழித்தெடுக்கும் நெட்டிசன்கள் அப்படி என்ன சொன்னார்?

4- சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வரும் 19 -ஆம் தேதி நடைபெறவுள்ளது அதற்கான பிரச்சாரம் நடைபெற்றுவரும் நிலையில் ,

அரவக்குறிச்சி தொகுதியில் இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள பகுதியில் பிரச்சாரம் செய்த மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமலஹாசன் .

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று பேசினார்., அது  கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது .

கமலின் இந்த பேச்சுக்கு பல அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்த நிலையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மத ரீதியாக மக்களை பிளவுபடுத்தும் வகையில் விஷத்தை கக்கும் கமலின் நாக்கை அறுக்க வேண்டும் என்று கூறினார் .

கமல் இந்துக்களை தீவிரவாதி என்று கூறியதற்கு ஒரு சிறிய கண்டனம் கூட தெரிவிக்காத திருமாவளவன் , ராஜேந்திர பாலாஜி கமலின் நாக்கை அறுக்க வேண்டும் என்று கூறியதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார் .

இதையும் படிக்க:  அது எப்படி நீங்கள் BC, MBC சமுதாயத்தினருக்கு இட ஒதுக்கீடு வழங்கலாம். திருமாவளவன் கடும் கோபம்

மேலும் ராஜேந்திர பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என்றும் அவரை கைது செய்ய வேண்டும் என்றும் திருமாவளவன் கூறியுள்ளார் .

திருமாவளவனின் இந்த செயலை சமூக வலைத்தளங்களில் பலரும் கிண்டல் செய்து விமர்சித்து வருகின்றனர் .
அதில் சிலர் வடிவேலு படத்தின் டயலாகான, இதுக்கு மட்டும் கத்துதா அந்த பல்லி என்று கிண்டல் செய்து வருகின்றனர்.

©TNNEWS24

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.

Loading...