பல கோடி பணத்துடன் சிக்கியது விடுதலை சிறுத்தை இதற்குதான் துரைமுருகன் வீட்டில் ரெய்டு நடத்தகூடாது என்றாரா?

பல கோடி பணத்துடன் சிக்கியது விடுதலை சிறுத்தை இதற்குதான் துரைமுருகன் வீட்டில் ரெய்டு நடத்தகூடாது என்றாரா?

பெரம்பலூர்.,

தமிழகத்தில் வருமானவரித்துறையினர் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திவரும் சோதனையில் இதுவரை 263 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணையம் அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது.

திமுக பொருளாளர் துரைமுருகனுக்கு சொந்தமான இடங்களில் கைப்பற்றப்பட்ட பணம் மூட்டைகள் குறித்தே இதுவரை மக்கள் அதிர்ச்சியில் இருந்து மீளாமல் இருக்க தற்போது பெரம்பலூரில் விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பணத்தை கடத்தியபோது பிடிபட்டது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பெரம்பலூர் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கு சிலர் தங்களது காரில் பணத்தினை பதுக்கி எடுத்து வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது அதனை தொடர்ந்து போலீசார் நடத்திய சோதனையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்கள் தங்கள் காரில் உட்ப்புறமாக மறைத்து வைத்திருந்த சுமார் 2 கோடிக்கு மேலான பணம் இருப்பது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

இதனை polimer news சேனல் வெளிப்படுத்தியுள்ளது. மேலும் திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதற்கு திருமாவளவன் கடுமையான கண்டனங்களை தெரிவித்தார்.

இதையும் படிக்க:  மல்லையாவுக்கு சொந்தமான தனி விமானத்தில் ராஜஸ்தான் பறந்த ஸ்டாலின் வாடகை எவ்வளவு தெரியுமா?

தற்போது அவர்கட்சி நிர்வாகி சிக்கி இருக்கும் நிலையில் இதற்குத்தான் திருமாவளவன் சோதனை நடத்தக்கூடாது என்றாரா இதுபோல் இன்னும் எங்கெல்லாம் எவ்வளவு பணம் பதுக்கி வைத்திருப்பார்களோ என்று மக்கள் கேள்வி எழுப்பிவருகின்றனர்.

இந்த பணம் சிதம்பரம் பகுதிக்கு கொண்டுசெல்லப்பட்டதா இல்லை வேறு யாருக்கு எடுத்துச்செல்லப்பட்டது என்ற விசாரணையில் காவல்துறை இறங்கியுள்ளது.

©TNNEWS24

Loading...