நேற்று செய்த செயல் மோடியை எதிர்த்தது எல்லாம் பணத்திற்காகத்தானா? கொதிக்கும் ஆதரவாளர்கள் !

தமிழகம் முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் நேற்று மிக பெரிய அசம்பாவிதங்கள் ஏதும் இன்றி அமைதியாக நடந்து முடிந்தது. மொத்தமுள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளில், வேலூர் தொகுதியை தவிர்த்து அனைத்து இடங்களிலும் மக்கள் தங்கள் வாக்கினை பதிவு செய்தனர்.

தமிழகத்தில் நேற்று பதிவான வாக்குகள் 9 மணி நிலவரப்படி 70.9 % வாக்குகளும் இடைத்தேர்தலில் 71.62 % வாக்குகளும் பதிவாகின. இறுதியான பதிவான வாக்குகளின் எண்ணிக்கை குறித்த நிலவரம் இன்று மாலை அதிகார பூர்வமாக வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அரசியல் செய்வதாகவும், அதிகாரத்தை கைப்பற்ற மத்திய பாஜக அரசை வீழ்த்த வேண்டும் என்று மிக அதிகமாக போராட்டங்களை நடத்தியதில் திருமுருகன் காந்தியும் ஒருவர். பாஜக அரசை வீட்டுக்கு அனுப்பியே தீரவேண்டும் என்று மிக பெரிய போராட்டங்களை செய்து கைதாகி சிறையில் இருந்தவர்.

இதையும் படிக்க:  கலாச்சாரத்தை பாதுகாப்பதால் மோடி மதவாதி என்றால் மதவாதியாக இருப்பதில் தவறில்லை - கிருஷ்ணசாமி அதிரடி பேட்டி !

ஏன் ஐ.நா சபை சென்று மனித உரிமை மீறலுக்காக குரல் கொடுத்தாக தன்னை முன்னிறுத்தி கொண்டவர் திருமுருகன், இந்த சூழலில் நாட்டின் 17 – வது நாடாளுமன்ற தேர்தலில் திருமுருகன் வாக்களிக்கவில்லை, என்ற செய்தி வெளியாகி சமூகவலைத்தளங்களில் பலத்த கிண்டலுக்கு உள்ளாகி வருகிறது.

போராட்டம் என்றால் தி. காந்தி வந்திருப்பார் வாக்களிப்பது அவருக்கு தெரியாதா என்றும் இவரை போன்றவர்கள் அரசியல் பேசினால் இனி மக்கள் அடித்து விரட்டவேண்டும் என்று ஒரு தரப்பினர் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.

மேலும் பல இடங்களில் அரசியல் பேசிய சிம்பு போன்றோர் இந்த தேர்தலில் தங்கள் வாக்கினை அளிக்கவில்லை, சமுதாயத்தில் பல இடங்களில் பாதிக்கப்பட்ட, எளிய மக்கள் அனைவரும் வாக்கினை பதிவு செய்திருக்கிறார்கள் ஆனால் திருமுருகன், சிம்பு போன்றோர் அரசியல் பேசி ஏதோ ஒருவகையில் சம்பாத்தியத்தை மனதில் வைத்து மக்களை ஏமாற்றவதுதான் இவர்கள் எண்ணம் என்றும் கடுமையான விமர்சனங்களை முன்வைக்கின்றனர்.

இதையும் படிக்க:  போத்திஸிடம் 7 லட்சம் ஆட்டையை போட்டது போல் சேலத்து அண்ணாச்சியிடம் ஆட்டையை போட முயற்சித்த பியூஷ்மனுஸ் நிலைமையை பாருங்க!

இன்னும் ஒரு சிலரோ இவர்கள் இனி அரசியல் மேடைகளில் பேசினால் வாக்களிக்காத உங்களுக்கு வாய்திறக்க உரிமையில்லை என்று சொல்லி வெளியேற்றவேண்டும் என்று தங்கள் கோவத்தை பதிவு செய்துள்ளனர்.

©TNNEWS24

Loading...