தாக்கப்பட்ட பாஜக மந்திரி அடித்து விரட்டப்பட்ட மம்தா பானர்ஜீ கலவர பூமியான மேற்குவங்கம் கூடுதல் ராணுவம் விரைவு.

தாக்கப்பட்ட பாஜக மந்திரி அடித்து விரட்டப்பட்ட மம்தா பானர்ஜீ கலவர பூமியான மேற்குவங்கம் கூடுதல் ராணுவம் விரைவு.

அசன்சோல்.

நாடுமுழுவதும் 4 ம் கட்ட நாடாளுமன்ற தேர்தல் கடும் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது, தற்போது மேற்குவங்கத்தில் நடைபெற்று வரும் தேர்தலுக்கு இடையே நடைபெறும் கலவரங்கள் மக்கள் மத்தியில் பயத்தினை ஏற்படுத்தியுள்ளன.

அசன்சோல் பகுதியில் போட்டியிடும் பாஜக அமைச்சர் பாபுல் சுப்ரியோ தொகுதி முழுவதும் உள்ள வாக்கு சாவடிகளில் பாதுகாப்பு பணிகள் மற்றும் வாக்கு எண்ணிக்கைகள் குறித்து பார்வையிடுவதற்காக சென்றிருந்தார் அப்போது 199 எண் கொண்ட வாக்கு சாவடி மையத்தில் பாஜக முகவரை அனுமதிக்காமல் திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் கள்ள ஓட்டு போட முயல்வதாக வந்த தகவலை அடுத்து அமைச்சர் அங்கு செல்ல இரு தரப்பிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அமைச்சரின் கார் அடித்து நொறுக்கப்பட்டது.

இதையும் படிக்க:  ஒரே ஒரு பேட்டி ஸ்டாலினை கதறவிட்ட தமிழிசை, புலம்பி தவிக்கும் ஸ்டாலின் !
PHOTO CREDIT – ANI

பாதுகாவலர்களை மீறி சிலர் தாக்குதல் நடத்தினர், மேலும் செய்தியை சேகரித்து கொண்டிருந்த இந்தியா டுடே பெண் செய்தியாளர் மீது திரிணமூல் காங்கிரஸ் தொண்டர் தலையில் அடித்தார், இவ்வாறு கலவரம் தொடங்க கூடிய திரிணமூல் தொண்டர்களை போலீசார் அடித்து விரட்டினர்.

அதனை தொடர்ந்து அதிக அளவிலான திரிணமூல் மற்றும் பாஜக தொண்டர்கள் வாக்கு பதிவு நடைபெறும் மையத்தின் முன் குவியத்தொடங்கினர், வாக்கு பதிவு பகுதிகளை பார்வையிட கிளம்பிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு, பெண்கள் எதிராக திரண்டு கோசம் எழுப்பினர், “நீ இரும்பு பெண்மணியல்ல, வங்கதேசத்தின் கூஜா பெண்மணி” என்று கோசம் எழுப்பினர். வெளியேற முடியாமல் தவித்த மம்தா வேறு வழியின்றி மம்தா திரும்பி சென்றுவிட்டார்.

இதையும் படிக்க:  சபரிமலையில் இரண்டு பெண்களை மாறுவேடத்தில் அனுப்பிவைத்த பினராயி விஜயன்!

இரும்பு பெண்மணியாக ஒரு காலத்தில் மேற்குவங்க மக்களிடையே வலம்வந்த மம்தா இன்று சொந்த மாநில மக்களால் வெளியில் வரமுடியாமல் விரட்டி அடிக்கப்பட்ட சம்பவம் மம்தாவின் இந்துக்களுக்கு எதிரான மற்றும் மேற்கு வங்க பூர்வ குடி மக்களுக்கு எதிரான நடவடிக்கைக்கு கிடைத்த பரிசு என பாஜகவினர் குற்றம் சுமத்துகின்றனர்.

இந்நிலையில் நிலைமை மோசமாவதை அறிந்த திரிணமூல் கட்சியினர் வாக்கு சாவடிகளை கைப்பற்றும் சூழல் நிகழலாம் என்பதால் கூடுதல் துணை ராணுவ படையினர் வாக்கு பதிவு நடைபெறும் மையங்களில் குவிக்கப்பட்டுள்ளனர்.

©TNNEWS24

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.

இதையும் படிக்க:  இந்தியாவில் மீண்டும் தேர்தல் நடக்கும் , எதிர்க்கட்சிகள் தீட்டியுள்ள சதித்திட்டம் எதையும் சந்திக்க பாஜக தொண்டர்கள் தயார் என அறிவிப்பு.
Loading...