திடீர் திருப்பம் நீதிமன்ற உத்தரவுப்படி பொதுசெயலாளர் ஆகிறார் தினகரன் சசிகலா நீக்கம் !

திடீர் திருப்பம் நீதிமன்ற உத்தரவுப்படி பொதுசெயலாளர் ஆகிறார் தினகரன் சசிகலா நீக்கம் !

சென்னை.

நீதிமன்றத்தில் அமமுக-விற்கு பொது சின்னம் ஒதுக்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர் தினகரன் தரப்பினர், அதற்கு தேர்தல் ஆணையம் தரப்பில் கட்சியாக பதிவு செய்யாத ஒரு தரப்பினருக்கு பொது சின்னம் ஒதுக்கமுடியாது என்று கூறப்பட்டது.

அதிமுக இரட்டை இலை தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதால் அமமுக-வினை கட்சியாக பதிவு செய்யமுடியவில்லை என்றும் தேர்தலுக்கு பிறகு பதிவு செய்வதாக உறுதிமொழி அளித்தனர்.

அதனை தொடர்ந்து கட்சியாக பதிவு செய்ய நிபந்தனையை விதித்து அமமுக கட்சிக்கு பரிசுப்பெட்டி சின்னத்தை ஒதுக்கியது நீதிமன்றம்.

தற்போது தேர்தல் நிறைவடைந்த நிலையில் அமமுகவின் பொதுச்செயலாளராக தினகரனை முன்னிறுத்தி கட்சியினை பதிவு செய்யவிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்துவிட்டனர்.

இதையும் படிக்க:  உள்ளாட்சி தேர்தல் எப்போது அதிரடி அறிவிப்பை வெளிட்ட தமிழக அரசு

மேலும் இதுவரை அமமுகவின் பொதுச்செயலாளராக இருந்த சசிகலாவை கட்சியில் இருந்து நீக்கிவிட்டு இப்போது தேர்தல் ஆணையத்தில் அமமுக-வை பதிவு செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளனர். கட்சியில் தான் மட்டுமே அதிகாரம் செலுத்தவேண்டும் என்ற நோக்கத்தில் தினகரன் சசிகலாவை கட்சியில் இருந்து நீக்கி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

©TNNEWS24

Loading...