கமல்ஹாசனுடன் இணைந்த வீரமணி !

4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் 19 -ஆம் தேதி நடைபெறவுள்ளது அதற்காக அரவக்குறிச்சி தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன்.

அப்போது இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள பகுதியில் பிரச்சாரம் செய்த அவர் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து தான் என்று பேசினார்.

அவரின் இந்த பேச்சை கேட்ட இந்துக்கள் கொதித்தெழுந்து கமலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

பல அரசியல் கட்சி தலைவர்களும் கமலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர் ஆனால் திராவிடர் கழகத்தின் தலைவர் வீரமணி கமலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

கமல் சொன்னது முற்றிலும் உண்மை என்று கூறியுள்ளார் வீரமணி , இதுவே கமல் இஸ்லாமியர்களை பற்றியோ கிருத்துவர்களை பற்றியோ இப்படி கூறியிருந்தால்

இதையும் படிக்க:  பெரியாரிஸ்டுகளை கிழித்தெடுத்த மரிதாஸ் இதற்கு வீரமணி விளக்கம் சொல்ல முடியுமா ?

வீரமணி என்ன செய்திருப்பார் அப்போதும் ஆதரவு தெரிவித்திருப்பாரா நிச்சயமாக மாட்டார் அப்போது முதல் நபராக கண்டனம் தெரிவித்திருப்பார்.

சுயமரியாதை , மதசார்பின்மை என்ற பெயரில் இந்து மதத்தை தாக்கும் செயலை தி.க போன்ற இயக்கங்கள் காலம் காலமாக செய்துவரும் நிலையில் இப்போது அந்த பட்டியலில் கமலஹாசனும் தன்னை மீண்டும் இணைத்துள்ளார் என்று இந்து அமைப்புகள் கூறிவருகின்றனர்.

©TNNEWS24

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.

Loading...