வீரமணியை விட்டுவிட்டு காலணிகளை சுத்தம் செய்த என்னை கைது செய்கிறார்கள் இந்து பெண் வேதனை.

கடவுளை அவமானப்படுத்திய வீரமணியை விட்டுவிட்டு வாக்களிக்காதீர்கள் என்று காலணிகளை சுத்தம் செய்த என்னை கைது செய்கிறார்கள் பெண் வேதனை.

திருச்சி.,

திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலின் முன் செருப்பு துடைத்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட பெண்ணை போலீசார் கைதுசெய்துள்ளனர்.

திராவிடர் கழக தலைவர் வீரமணி போன்றோர் இந்து கடவுள்களை தொடர்ந்து, இழிவுபடுத்தி வருகிறார் , அவருக்கு உறுதுணையாக திமுக போன்ற கட்சிகள் உள்ளது.

இந்த நிலையில் திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலின் முன் பெண் ஒருவர், அங்கு வரும் பக்தர்களின் செருப்புகளை துடைத்து நூதன வேண்டுதலில் ஈடுபட்டிருந்தார்.

அப்படி துடைக்கும் போதே திமுக கூட்டணிக்கும் குறிப்பாக திருச்சி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசருக்கு வாக்களிக்க வேண்டாம், என்று வேண்டுகோள் வைத்தும் வந்தார்

இதையும் படிக்க:  மேகதாதுவில் கர்நாடகாவை எடப்பாடி விரட்டி அடித்தது போல் அன்று காவிரி வழக்கில் கருணாநிதி விலை போகாமல் இருந்திருந்தால்!

அப்போது அங்கு வந்த காங்கிரஸ் கட்சியினர் அந்த பெண்ணை கடுமையாக திட்டி தாக்கவும் முயன்றனர், பின்னர் அங்கு வந்த காவல் துறையினர் அந்த பெண்ணை கைது செய்தனர்.

அப்போது அந்த பெண் இந்து மதத்தையும் கடவுள்களையும் இழிவுபடுத்தும் வீரமணி போன்றோரை விட்டு விட்டு எனது கோரிக்கையை வேண்டுதலாக செருப்பை துடைத்து பரிகாரம் செய்யும் என்னை ஏன் கைது செய்கிறீர்கள் என்று கேட்டார்.

மேலும் என்னை கைது செய்யும் அதே சட்ட பிரிவுகளில் தான் வீரமணி மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது அவர்களை போன்ற அயோக்கியர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது எந்த வகையில் நியாயம் என்றும் கேள்வி எழுப்பினார்.

ஆனாலும் அந்த பெண்ணை வம்படியாக கைதுசெய்தனர் போலீசார் விசாரணையில் அந்த பெண் சென்னை அண்ணாநகரை சேர்ந்த நர்மதா நந்தகுமார் என்பது தெரியவந்தது.

இதையும் படிக்க:  திருநெல்வேலி தொகுதியில் வெற்றி யாருக்கு ? தேர்தலுக்கு பிந்தைய பிரமாண்ட கருத்துக்கணிப்பு?

ஆனால் ஒருதலைபட்சமாக நடந்த போலீசார் பக்தர்களின் செருப்பை துடைத்த அந்த பெண்ணின் மீது பொது இடத்தில் தகாத வார்த்தைகளை பயன்படுத்துதல் , பொதுமக்களை மிரட்டுதல் , பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் இவை அனைத்திற்கு மேலாக கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

சாதாரண முறையில் தனது கோரிக்கையை முன்வைத்த பெண்ணை கைது செய்துள்ள காவல்துறையினர், வீரமணி போன்ற மதவெறியை தூண்டும் நபர்களை கைது செய்யாமல் பாதுகாப்பது சட்டத்தை பொதுமக்கள் கைகளில் எடுக்கும் சூழல் உருவாகும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

©TNNEWS24

Loading...