வன்னியர்கள் நன்றி உணர்வுடன் ஏன் திருமா அண்ணாவை ஆதரிக்கவேண்டும் வேல்முருகன் சொன்ன காரணம் !

வன்னியர்கள் நன்றி உணர்வுடன் ஏன் திருமா அண்ணாவை ஆதரிக்கவேண்டும் வேல்முருகன் சொன்ன காரணம் !

சிதம்பரம்.,

சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு ஆதரவு தெரிவித்ததுடன் அவரது வெற்றிக்கு பாடுபட இருப்பதாகவும், அவரை எதிர்த்து பா.ம.க ஆதரவுடன் போட்டியிடும், அ.தி.மு.க வேட்பாளரை தோல்வியடைய செய்ய கடுமையாக களப்பணியாற்ற போவதாக வேல்முருகன் கூறி இருக்கிறார்.

தற்போது அவர் நான் ஏன் திருமாவளவனை ஆதரித்தேன் என்றும், ஏன் வன்னியர்கள் திருமா அண்ணனை ஆதரிக்க வேண்டும் என்றும் பல்வேறு கருத்துக்களை வீடியோ மூலம் பேசி இருக்கிறார் அதனை இங்கு பார்க்கலாம்.

திருமாவளவன் சாதித்த தலைவர் என்றும் அவரை சாதி என்ற குறுகிய வட்டத்தில் அடைக்க கூடாது என்ற கோரிக்கையையும் வைத்துள்ளார். மேலும் நாடாளுமன்றத்தில் OBC, MBC சமூகத்திற்காக குரல் கொடுத்தவர் அண்ணன் என்றும் அவரின் நன்றியை பாராட்டி வன்னியர்கள், உட்பட அனைத்து சமூகத்தினரும் அவருக்கு வாக்கு அளிக்கவேண்டும் என்று கூறி இருக்கிறார்.

இதையும் படிக்க:  கலாச்சார சீரழிவிற்கே உங்க பெரியார் கொள்கைதான் காரணம் பொள்ளாச்சியில் விரட்டப்பட்ட கௌசல்யா, பனிமலர் ?

வீடியோ பார்க்க :-

Credit – spy videos

பா.ம.க கட்சியினரோ வேல்முருகன் தங்களை அரசியலில் நேருக்கு நேர் எதிர்கொள்ள முடியாமல் இப்படி ஒரு செயலில் வேல்முருகன் இறங்கியிருப்பதாகவும், வன்னியர் உட்பட குரல் கொடுத்த திருமாவளவன் பெரிது என்றால் தமிழகத்தில் மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுத்து பல சாதிகளுக்கு சலுகைகளை பெற்று தந்தது பா.ம.க என்றும் அதற்கு காரணம் மருத்துவர் ராமதாஸ் என்றும் அவர்கள் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைக்கின்றனர்.

©TNNEWS24

Loading...