ஹோட்டலில் இருந்து கைப்பற்றப்பட்ட வாக்கு பதிவு இயந்திரங்கள் அதிர்ச்சியில் தேர்தல் ஆணையம்..

பீகார்

பீகார் மாநிலத்தில் நேற்று நடந்த 5 -ஆம் கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது பீகாரின் முசாபார் நகரின் பிரபல ஹோட்டலில் இருந்து 2 வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒரு கட்டுப்பட்டு கருவி மற்றும் 2 ஒப்புகைசீட்டு இயந்திரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த இயந்திரங்களை முசாபார் நகரின் சார் ஆட்சியர் அவருக்கு கிடைத்த தகவலின் படி ஹோட்டலுக்கு சென்று கைப்பற்றினார்.

வாக்கு பதிவு நடைபெற்றுக்கொண்டிருக்கும் நேரத்தில் இப்படி தனியார் உணவகத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கைப்பற்றப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்த தகவலை அறிந்த பொதுமக்கள் வாக்குபதிவில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக கூறி முழக்கமிட்ட நிலையில் உண்மை வெளியாகியுள்ளது

பீகார் மாநிலத்தின் தேர்தல் அதிகாரி அவதேஷ் குமார் அந்த இயந்தரங்களை அங்கு சென்று வைத்தது தெரியவந்துள்ளது,

இதையும் படிக்க:  13 வேட்பாளர்களின் அந்தரங்க விடியோவை வெளியிட இருக்கிறார்கள் பதற்றத்தில் வேட்பாளர்கள்

அந்த இயந்திரங்கள் ஒருவேளை கோளாறு ஏற்பட்டால் மாற்றுவதற்காக கொண்டுவரப்பட்ட மாற்று இயந்திரங்கள்

தேர்தல் அதிகாரியின் கார் ஓட்டுநர் தனது வாக்கை பதிவு செய்ய சென்று விட்டதால் அவர் வரும் வரை ஹோட்டலில் வைத்திருந்தது தெரியவந்தது

என்னதான் காரணம் இருந்தாலும் வாக்கு பதிவு இயந்திரத்தை ஹோட்டலில் வைத்தது தவறு என்பதால் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

©TNNEWS24

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.

Loading...