சதை கிழிந்து ரத்தம் வடிந்தாலும் சென்னைஅணிக்காக விளையாடிய வீரர் தோனி கண்ணீர் !

கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த ஆண்டிற்கான ஐபிஎல் இறுதிப்போட்டி நடைபெற்றது அதில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதின.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடந்த இந்த போட்டியில் கடைசி பந்து வரை ஆட்டம் சென்றது இறுதியில் 1 ரன் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றிபெற்றது.

அந்த ஆட்டத்தில் அபாரமாக ஆடிய சென்னை அணியின் துவக்க வீரர் சேன் வாட்சன் 59 பந்துகளில் 80 ரன்களை அடித்தார்.

துவக்கஆட்டக்காரராக களமிறங்கிய அவர் இறுதி ஓவரில்தான் ரன் அவுட் ஆனார் , இந்த ஆட்டத்தில் சேன் வாட்சன் களத்தில் இருக்கும்போதே அவருக்கு காலில் தசை கிழிந்துள்ளது.

அதனால் ரத்தம் கொட்டியும் போட்டியின் முக்கியத்துவத்தை உணர்த்த அவர் வெளியில் சொல்லாமல் ரத்தம் சொட்ட சொட்ட சென்னை அணிக்காக விளையாடியுள்ளார்.

இதையும் படிக்க:  பேருந்தில் இடம்பெற்ற கோபக்கார தோனி

, இதுபற்றி கூறிய சேன் வாட்சன் வேறு எந்த அணியாக இருந்தாலும் எனக்கு இத்தனை வாய்ப்புகளை கொடுத்திருக்க மாட்டார்கள்.

சென்னை அணியும் கேப்டன் தோனியும் எனக்கு வாய்ப்புகளை வாரி வழங்கினார்கள் என்றும் அவர்கள் என்மீது வைத்த நம்பிக்கைக்கு நன்றி கடனாக நான் தசை கிழிந்து ரத்தம் சொட்டியபோதும் வழியை பொறுத்து கொண்டு விளையாடினேன் என்று கூறினார்.

இதுபற்றி கூறிய தோனி சேன் வாட்சன் அணிமீதும் என் மீதும் வைத்துள்ள பாசத்தை பார்க்கும்போது என் கண் கலங்குகிறது என்று கூறி கண் கலங்கிவிட்டார் தோனி.

தற்போது மருத்துவமனையில் உள்ள வாட்ஸனுக்கு 6 தையல்கள் போடப்பட்டுள்ளது , மீண்டும் அடுத்த ஆண்டு ஐபிஎல் சென்னை அணிக்காக சிறப்பாக விளையாடுவேன் என்றும் கூறியுள்ளார்.

இதையும் படிக்க:  வெளியானது உலகக்கோப்பைக்கான இந்திய அணி வீரர்களின் பட்டியல் தமிழக வீரர்களுக்கு முக்கியத்துவம் !

©TNNEWS24

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.

Loading...