உள்ளாட்சி தேர்தல் எப்போது அதிரடி அறிவிப்பை வெளிட்ட தமிழக அரசு

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றிருக்க வேண்டிய நிலையில் , இதுவரை நடைபெறவில்லை,

உள்ளாட்சியில் உறுப்பினர்கள் இல்லாததால் மக்கள் பணிகள் சரியாக நடப்பதில்லை என்றும் அதனால் உடனடியாக உள்ளாட்சி தேர்தலை நடத்திட வேண்டும் என்று மதுரையை சேர்ந்த ஒருவர் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டனர்.

அதன்படி நேற்று பதிலளித்த தமிழக அரசு தமிழகத்தில் இப்போது தான் மக்களவை தேர்தலும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.

மேலும் வரும் 19 ஆம் தேதி 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது அதனால் உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்துவது கடினம்.

இதையும் படிக்க:  கடும் கோபத்தில் துரைமுருகன். ஏன் ஸ்டாலின் பிரசன்னாவை விரட்டிவிட்டார் இப்போ தெரியுதா ?

மேலும் புதிய வார்டு வரையறை பனி இப்போது தான் முடியும் தருவாயில் உள்ளது அதனால் உள்ளாட்சி தேர்தலை நடத்த தமிழக தேர்தல் ஆணையம் சொன்னதுபோல 3 மாத அவகாசம் வேண்டும்.

மேலும் இது தொடர்பான எந்த உத்தரவையும் நீதிமன்றம் பிறப்பிக்கக்கூடாது , தமிழக தேர்தல் ஆணையமே அனைத்து உத்தரவுகளையும் பிறப்பிக்கவேண்டும் என்று தமிழக அரசு வாதிட்டது.

தமிழக அரசின் வாதத்தை கேட்ட நீதிபதிகள் வழக்கை வரும் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தினர் , தமிழக அரசின் இந்த வாதத்தின் மூலம் அடுத்த 3 மாதங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் நடப்பது கடினம் என்றே தெரிகிறது.

ஒருவேளை மே 23 அன்று வெளியாகும் தேர்தல் முடிவுகள் ஆளும் அரசுக்கு சாதகமாக இருந்தால் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது.

இதையும் படிக்க:  கேள்வி கேட்டவரை மக்கள் முன்னிலையில் அடித்த ஜோதிமணி.. ஆதரவாளர்கள் வெறியாட்டம்..

இதன்மூலம் தமிழக அரசு முன்பே கூறியதுபோல், உள்ளாட்சி தேர்தல் மூன்று மாதங்களுக்கு நடைபெறாது என்று வேலுமணி சொன்னதுபோல் தற்போது நீதிமன்றத்திலேயே அதிரடியாக கூறியிருக்கிறது.

©TNNEWS24

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.

Loading...