கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதியில் வெற்றி யாருக்கு தேர்தலுக்கு பிந்தைய பிரமாண்ட கருத்து கணிப்பு !

கள்ளக்குறிச்சி

சமீபத்தில் விழுப்புரம் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது கள்ளக்குறிச்சி
இந்த தொகுதி சிறப்பு கவனம் பெரும் தொகுதி.

காரணம் இந்த தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் தேமுதிகவிலிருந்து விஜயகாந்த்தின் மைத்துனர் எல் கே சுதீஷ் போட்டியிடுகிறார்.

மறுமுனையில் திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகன் கெளதம் சிகாமணி போட்டியிடுகிறார்.

எல் கே சுதீஷ் இதுவரை 3 முறை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்துள்ளார் , மறுமுனையில் உள்ள கெளதம் சிகாமணி இதுவரை தேர்தலில் போட்டியிட்டதில்லை இதுவே அவர் தேர்தலில் போட்டியிடுவது முதல் முறை.

திமுகவிலுள்ள மூத்த தலைவர் பொன்முடியின் மகன் என்பதால் இவருக்கு நேரடியாக இடம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த கள்ளக்குறிச்சி தொகுதியின் கடந்தகால வரலாறை பார்த்தல் இதுவரை திமுக அதிமுக என மாறி மாறி வெற்றிபெற்றுள்ளனர்.

இதையும் படிக்க:  வீடியோ வெளியானதால் பாதிக்கப்பட்ட பெண் தற்கொலை முயற்சி இப்போ உங்களுக்கு சந்தோசமா பெண்ணின் உறவினர்கள் வேதனை !

தேமுதிகவிற்கென குறிப்பிட்ட வாக்குகள் உள்ள தொகுதி இந்த கள்ளக்குறிச்சி தேமுதிக தலைவர் விஜயகாந்த் போட்டியிட்டு வெற்றிபெற்ற ரிஷிவந்தியம் தொகுதியை உள்ளடக்கியது.

பொன்முடியின் மகன் போட்டியிடுவதால் இது அவருக்கு தன் மான பிரச்னை அதனால் இறுதிக்கட்டத்தில் பெரியளவில் வைட்டமின் ப வேலைசெய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தேர்தல் முடிந்த சூழலில் நமது கணிப்பின்படி 3-4 சதவீத வாக்குகள் வித்தியாசத்தில் பொன்முடியின் மகன் கெளதம் சிகாமணி வெற்றிபெறுவார் என்று தெரியவருகிறது.

result

கள்ளக்குறிச்சி தொகுதியை திமுக கைப்பற்றுகிறது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் நலமுடன் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தால் நிச்சயம் கள்ளக்குறிச்சி தேமுதிக பக்கம் செல்ல வாய்ப்புகள் இருந்திருக்கும்.

©TNNEWS24

Loading...