அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பளார் விட்ட நபர் யார் தெரியுமா? அவருக்கும் தமிழ்நாட்டிற்கும் என்ன தொடர்பு?

அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது சிகப்பு நிற ஆடை அணிந்த நபர் அவரை கன்னத்தில் தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பளார் விட்ட நபர் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

டெல்லியில் தேர்தல் பிரச்சாரத்தின் போது முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை தாக்கிய நபர் யார் என்று போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

போலீசார் விசாரணை மேற்கொண்டதில், அந்த நபரின் பெயர் சுரேஷ்(33) என்பது தெரியவந்துள்ளது.

இவர் கெஜ்ரிவாலை தாக்கியது இது முதல் முறை இல்லையாம் . முன்னதாக கெஜ்ரிவால் மீது மிளகாய் பொடி தூவியதும்,இங்க் அடித்ததும் இந்தசுரேஷ் தான்.இவர் ஆம் ஆத்மி கட்சியில் உறுப்பினர் என்பது மற்றொரு அதிர்ச்சி தகவலையும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க:  வல்லரசுகளுக்கு இணையாக சாதித்து காட்டியது இந்தியா காங்கிரஸ் அரசால் முடியாததை நிகழ்த்திய பாஜக.

பல்வேறு இடங்களில் நடைபெறும் ஆம் ஆத்மி கட்சி பொதுக்கூட்டங்களை சுரேஷ் முன்னின்று நடத்தி இருக்கிறார் ஆனால் தற்போது அக்கட்சித் தலைவர்கள் மற்றும் கெஜ்ரிவாலின் கொள்கையில் மாற்றம் வந்துள்ளதாகவும் குற்றம் சுமத்தும் சுரேஷ், வாக்கு கேட்கும்போது கெஜ்ரிவால் நான் மதம், மொழி, இனம் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்கமாட்டேன் என்று சொல்லியிருந்தார், ஆனால் தற்போது இவரும் மற்ற கட்சிகளைப்போல் மொழி இனத்தை வைத்து அரசியல் செய்ய தொடங்கிவிட்டார்.

மொழி இனத்தை கடந்து டெல்லி பல்கலைக்கழத்தில் பயிலும் தமிழ் மாணவர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்று கூறி வேதனை ஏற்படுத்தியது எந்தவகையில் நியாயம் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து ஆட்சிக்கு வந்த கெஜ்ரிவால் இப்போது 3 சீட் பேரம் பேசி அவர்கள் பின்னால் ஓடியது எந்த வகையில் நியாயம், இது போன்ற கொள்கை எனக்கு பிடிக்கவில்லை இனி மேலும் கெஜ்ரிவால் இவ்வாறு ஈடுபட்டால் அடிப்பேன் என்றும் சுரேஷ் எச்சரித்துள்ளார்.

இதையும் படிக்க:  மாட்டிக்கொண்ட கமல் பொது இடத்தில் செய்யுற வேலையா இது?

இதுவரை யாரும் சுரேஷ் மீது புகார் அளிக்காததால் சுரேஷை கைது செய்யவில்லை என்று தெரிவித்துள்ளனர். கெஜ்ரிவாலின் அறிவிப்பிற்கு எதிராக தமிழ் அமைப்புகள், அரசியல் கட்சிகள் போராடாத போது சுரேஷ் தமிழக மாணவர்கள்காக கெஜ்ரிவாலை அறைந்தது குறிப்பிடத்தக்கது.

©TNNEWS24

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.

Loading...