தமிழக பாஜகவின் அடுத்த தலைவர் இவர்தான் !

நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்தில் நடந்து முடிந்துள்ள சூழலில் இரண்டு நாட்களாக தமிழக பாஜகவின் அடுத்த தலைவர் பதவிக்கு வரக்கூடியவர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது, அதற்கு காரணமாக பார்க்கப்படுவது இரண்டு முறை தமிழகத்தின் பாஜக தலைவராக வழிநடத்திய தமிழிசையின் பதவிக்காலம் முடிவடைய இருக்கிறது.

அதனை தொடர்ந்து பலரும் டெல்லிக்கு சென்று தமிழக பாஜக தலைவர் பொறுப்பை கைப்பற்றுவது குறித்த ரேஸில் இணைந்துள்ளனர். தற்போது தமிழக பாஜகவில் முன்னணி தலைவர்களாக உள்ள H ராஜா, வானதி ஸ்ரீனிவாசன், கருப்பு முருகானந்தம், kt ராகவன் மற்றும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் பெயர்கள் இதில் அடிபடுகிறது.

H ராஜாவினை பொறுத்தவரை தற்போது சிவகங்கை தொகுதியின் வெற்றியை எதிர்நோக்கி காத்திருக்கிறார் அவர் சிவகங்கை தொகுதியில் வெற்றிபெறும் பட்சத்தில் நிச்சயம் மத்திய அமைச்சர் ஆவர் என்பது உறுதி எனவே தற்போதுவரை அவர் தலைவர் பதவிக்கு முயற்சி செய்யவில்லை தேர்தலுக்கு பிறகே அது குறித்து யோசிப்பார்.

இதையும் படிக்க:  அரசியலில் இறங்கினார் தி கிரேட் காளி எந்த கட்சி தெரியுமா?

நிர்மலா சீதாராமன் மீண்டும் பாஜக அரசாங்கத்தில் மத்திய அமைச்சராக வருவதற்கே அதிகம் வாய்ப்புகள் இருப்பதாகவும், அவர் தேசிய அரசியலில் இருப்பதால் மாநில அரசியலில் ஈடுபடுவது குறித்து தற்போதுவரை அவர் முயற்சி செய்யவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருப்பு முருகானந்தம் மத்திய அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணனின் தீவிர ஆதரவாளர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று, மேலும் அதிரடியாக பேசக்கூடியவர் என்பதும், முக்குலத்தோர் அகமுடையார் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் இவருக்கான வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது.

KT. ராகவன் தொலைக்காட்சி விவாதங்களின் மூலம் அதிகம் பாஜகவினர் மத்தியில் பிரபலமானவர் என்பதாலும் அனைவரையும் அரவனைத்து செல்வார் என்ற நம்பிக்கையில் அவரது பெயரும் பரிசீலனையில் இருப்பதாக சொல்ல படுகிறது.

இதையும் படிக்க:  திருடனையும் மொள்ளமாரியையும் கூட வச்சுக்கிட்டா எங்களை மிரட்டுற ஸ்டாலினை வெளுத்து வாங்கிய எடப்பாடி !

வானதி ஸ்ரீனிவாசன்

வானதி ஸ்ரீனிவாசன் திருப்பூர் மற்றும் கோவை தொகுதிகளில் ஏதேனும் ஒன்றில் போட்டியிடுவதற்கு நாடாளுமன்ற தேர்தலில் வாய்ப்பு கேட்டு அவருக்கு கிடைக்கவில்லை. மாநில தலைவர் பதவி வானதி ஸ்ரீனிவாசனுக்கு கிடைப்பதற்கே அதிகம் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதன் காரணமாகவே வானதி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை என்றும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

மீண்டும் பெண் ஒருவர் தலைவர் பதவிக்கு வர வாய்ப்பில்லை என்று பலரும் பேசிவரும் நேரத்தில் தமிழக பாஜகவில் அடுத்தமாநில தலைவராக வானதி ஸ்ரீனிவாசன் வருவதற்கே அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

இது தவிர தற்போது நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தலைவர்களின் முடிவுகள் ஒரு வேலை அவர்களுக்கு எதிராக அமைந்தால் அவர்களும் தலைவர் இடத்திற்கான போட்டியில் இணைவார்கள் என்றும் கூறப்படுகிறது.

இதையும் படிக்க:  கூட்டணி கட்சியை பிரிக்க உத்தரவிட்ட ஸ்டாலின் நாரதர் வேலையை தொடங்கிய ஊடகங்கள்.

©TNNEWS24

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.

Loading...