கடலூர் பாராளுமன்ற தொகுதியில் வெற்றி யாருக்கு தேர்தலுக்கு பிந்தைய பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவு வெளியானது

கடலூர்

கடலூர் தொகுதி இந்த தொகுதியில் குறிப்பிடத்தகுந்த அம்சம் என்னவென்றால் இந்த தொகுதியில் பாமக மற்றும் விடுதலை சிறுத்தைகள் ஆகிய இரண்டு கட்சிகளும் இங்கு குறிப்பிடத்தக்க சமூக ரீதியான வாக்குகளை வைத்துள்ளனர்.

அந்த வாக்குகள் நிச்சயம் தேர்தல் களத்தில் முக்கியபங்காற்றும் கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் கடலூர் , பண்ருட்டி , நெய்வேலி , விருத்தாச்சலம் , தீட்டக்குடி , குறிஞ்சிப்பாடி என 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது.

இந்த தொகுதியை அதிமுக தனது கூட்டணி கட்சியான பாமகவிற்கு ஒதுக்கியுள்ளது பாமக சார்பில் இந்த தொகுதியில் ஆர் கோவிந்தசாமி போட்டியிடுகிறார்.

திமுக இந்த தொகுதியில் நேரடியாக களமிறங்கியுள்ளது, திமுக சார்பில் இந்த தொகுதியில் ஆர் வி எஸ் ரமேஷ் போட்டியிடுகிறார்.

இதையும் படிக்க:  முதல்முறையாக 13 தொகுதிகளில் வெற்றியை உறுதி செய்யும் தீவிர இந்துத்துவ வாக்குகள் கடும் பயத்தில் திமுக தலைமை எடுத்த புது முடிவு.

அது தவிர அமமுக, மக்கள் நீதி மையம் , நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளும் களத்தில் உள்ளனர் இந்த தொகுதியில் முன்பு குறிப்பிட்டதுபோல பாமக தனக்கென தனி சமூக வாக்குகளை வைத்துள்ளது.

அதேபோல விடுதலை சிறுத்தைகள் கட்சியும் அதன் சமூக வாக்குகளை குறிப்பிடத்தகுந்த அளவு வைத்துள்ளது.

இந்த கடலூர் தொகுதி ஒரு கடும் போட்டிமிகுந்த தொகுதியாக உள்ளது , தேர்தல் முடிந்த சூழலில் நமது கணிப்பின்படி இந்த தொகுதியில் பாமக 43 -45 சதவீத வாக்குகளையும் திமுக அதே 43 – 45 சதவீத வாக்குககையும் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த தொகுதி ஒரு கடும் இழுபறி நிறைந்த தொகுதியாக உள்ளது ஆனால் மாம்பழம் சின்னமும் , உதயசூரியன் சின்னமும் மோதுவதால் அது திமுகவிற்கு சாதகமான சூழலை ஏற்படுத்தியுள்ளது

இதையும் படிக்க:  மோடியை தவறாக விமர்சித்து கழுத்தில் பலகை அணிந்திருந்த கம்யூனிஸ்ட் நபர் . சபரிமலை சென்றுவிட்டு திரும்பிய ஐயப்ப பக்தர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா?

ஒருவேளை இந்த தொகுதியில் இரட்டை இலை சின்னம் போட்டியிட்டிருந்தால் நிச்சயம் அதிமுக வெற்றிபெற்றிருக்கும்

ஆனாலும் கடலூர் தொகுதியில் யார் வெற்றிபெறுவார் என்பதை கணிப்பது கடினம் தான்

RESULT.

தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பின்படி கடலூர் தொகுதியில் குறைந்தபட்ச வாக்குகள் வித்தியாசத்தில் திமுக இங்கு வெற்றபெறும்.

©TNNEWS24

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று மெசேஜ் அனுப்பவும்.

Loading...