வைகோவிற்கு கிடைத்த ஒற்றை சீட்டு வெற்றியா? தோல்வியா ஈரோடு தேர்தலுக்கு பிந்தைய சர்வே என்ன சொல்லுது?

ஈரோடு,

ஈரோடு பாராளுமன்ற தொகுதி இந்த தொகுதி கொங்கு மண்டலத்தில் உள்ளதால் இந்த தொகுதியில் அதிமுக தனக்கென தனி செல்வாக்கினை கொண்ட பகுதியாக உள்ளது.

எனவே திமுக ஈரோடு தொகுதியை தனது கூட்டணி கட்சியான மதிமுகவிற்கு ஒதுக்கியுள்ளது. இங்கு மதிமுக சார்பில் போட்டியிடும் கணேசமூர்த்தி மக்களிடம் நன்கு பரிட்சியமானவர்.

இந்த ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது அவை ஈரோடு மேற்கு , ஈரோடு தெற்கு , காங்கேயம், மொடக்குறிச்சி , தாராபுரம் , குமாரபாளையம்.

இந்த தொகுதியில் அதிமுக வேட்பாளராக காங்கேயம் பகுதி சேர்ந்த வெங்கு ஜி.மணிமாறன் என்பவர் போட்டியிட்டார் மறுமுனையில் திமுக கூட்டணி சார்பில் மதிமுகவிலிருந்து கணேசமூர்த்தி போட்டியிட்டார்.

மதிமுகவின் கணேசமூர்த்தி 2009 -2014 வரை ஈரோடு தொகுதியின் மக்களவை உறுப்பினராக இருந்தவர் கடந்த 2014 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு இரண்டாமிடம் பிடித்தார் அதில் திமுக 3 ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டது.

இதையும் படிக்க:  வேலூரில் தேர்தல் ரத்து செய்யப்படுமா தேர்தல் அதிகாரி விளக்கம் !

அதிமுக வேட்பாளர் மணிமாறன் காங்கேயம் பகுதியில் மிகவும் பிரபலமானவர் முதல் முறையாக போட்டியிடுகிறார் , இது அவருக்கு பலமாக அமைந்துள்ளது.

கணேசமூர்த்தி சுயேட்சை சின்னத்தில் போட்டியிடாமல் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது கணேசமூர்த்திக்கு பலமாக அமைந்துள்ளது.

மதிமுக என்ற கட்சிக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு இல்லை என்றாலும் கணேசமூர்த்திக்கு தொகுதி முழுவதும் நல்ல அறிமுகம் உள்ளது.

தேர்தல் முடிந்த நிலையில் தமிழகத்தில் கடும் இழுபறி நிலவும் தொகுதிகளில் இந்த ஈரோடு தொகுதியும் ஒன்றாக உள்ளது

ஆனாலும் இந்த தொகுதியில் கணேசமூர்த்தி சிறிய முன்னிலை பெறுவதை பார்க்கமுடிகிறது.

Result.

திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் கணேசமூர்த்தி போட்டியிடுவதால் ஈரோடு தொகுதியில் மதிமுகவிற்கு வெற்றிவாய்ப்புகள் உள்ளதே தற்போதைய தேர்தலுக்கு பிந்தைய களநிலவரம்.

இதையும் படிக்க:  கெத்துக்காட்டிய அதிமுக பாமக அலறும் திமுக விடுதலை சிறுத்தைகள்

அதிமுக சார்பில் விட்டமின் பா அதிகமாக இறைக்கப்பட்டுள்ளது என்பது வெற்றியை பெற்றுதரும் என்று மணிமாறன் தரப்பினர் நம்புகின்றனர்.

©TNNEWS24

Loading...