ஜோதிமணியா? தம்பிதுரையா? மோதலில் முடிந்த கரூர் தேர்தலில் வெற்றி யாருக்கு வெளியானது பிரமாண்ட சர்வே முடிவு !

கரூர்.,

கரூர் மக்களவை தொகுதி கொங்கு மண்டலத்தில் இருப்பதால் இதுவரை அதிமுகவின் செல்வாக்குமிக்க பகுதியாகவே இருந்து வந்துள்ளது.

தற்போதைய கரூர் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் தான் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை , இவர் இந்த தொகுதியில் 5 முறை வெற்றிபெற்றுள்ளார்.

மீண்டும் தம்பிதுரையே இந்த முறையும் அதிமுகவின் வேட்பாளராக களமிறங்கியுள்ளார் , மறுமுனையில் திமுக இந்த தொகுதியை தனது கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கியது.

காங்கிரஸ் கட்சி சார்பில் ஜோதிமணி இந்த தொகுதியில் களமிறங்கியுள்ளார் , என்னதான் இந்த தொகுதி அதிமுகவின் கோட்டையாக இருந்தாலும்.

கடந்த 10 ஆண்டுகளாக தம்பி துறை இதே தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளதால் அவர் மீது சில அதிருப்திகள் உள்ளது அந்த அதிருப்தியை அறுவடை செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளது காங்கிரஸ்.

இதையும் படிக்க:  நீலகிரி தொகுதியில் வெற்றி யாருக்கு ? தேர்தலுக்கு பிந்தைய பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவு !

இந்த தொகுதியில் நிச்சயம் ஜோதிமணி தான் வெற்றிபெறுவார் என்ற சூழல் தான் நிலவியது, ஆனால் அதன் பின்பு சபரிமலை விவகாரத்தில் இந்துக்களுக்கு எதிராக ஜோதிமணி பேசியது மக்கள் மத்தியில் பரவியது.

அதனால் ஜோதிமணிக்கு செல்லுமிடமெல்லாம் எதிர்ப்பு எழவே அன்று முதல் காலை கோவில் சென்று கடவுளை வணங்கி பொட்டு வைத்துக்கொண்டு தான் பிரச்சாரத்திற்கு சென்றார் ஜோதிமணி.

மேலும் இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரத்தின்போது அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதால் அதுவரை செந்தில் பாலாஜியிடமிருந்து கிடைத்த நிதி உதவி கிடைக்காமல் போனதாகவும் கூறப்படுகிறது.

அதன் பின்னர் ஜோதிமணி காங்கிரஸ் தலைமையிடம் முறையிட பின்பு தான் காங்கிரஸ் தலைமையிலிருந்து நிதி உதவி கிடைத்ததாக தகவல்கள் பேசப்படுகிறது.

இதையும் படிக்க:  ப்ரியங்காவை கலாய்க்கும் அருண் ஜெட்லீ , பதில் கூற முடியாமல் தவிக்கும் காங்கிரஸ் !

இறுதி நாள் பிரச்சாரத்தின் போது கரூர் பேருந்துநிலையம் அருகே அதிமுக, திமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டு

திமுகவினர் பேருந்துகளை உடைத்து அனைவரும் அறிந்த ஒன்று இப்படி காங்கிரஸ் வெற்றிபெறும் என்று நினைத்த தொகுதியில் அந்த கட்சிக்கு சறுக்கல்கள் ஏற்பட்டுள்ளது.

தேர்தல் முடிந்த நிலையில் நமது கணிப்பின்படி இந்த தொகுதியில் அதிமுக 44 -46 சதவீத வாக்குகளையும் காங்கிரஸ் கட்சி 43 -45 சதவீத வாக்குகளையும் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தொகுதியில் கடும் போட்டி நிலவுவதால் யார் வெற்றியாளர் என்பது கணிக்கமுடியாததாக உள்ளது . மே 23 அன்று கவனிக்கப்படவேண்டிய தொகுதிகளில் கரூர் தொகுதியும் ஒன்று.

Result.

ஜோதிமணிக்கு வெற்றிபெற வாய்ப்புகள் உள்ளது, இருப்பினும் இழுபறி நிலையில் எப்படி வேண்டுமானாலும் முடிவுகள் மாறலாம்.

இதையும் படிக்க:  சரக்கு மிடுக்கு இருப்பதாக பேசிய திருமாவளவனை கூட்டணியில் வைத்து கொண்டு பொள்ளாச்சி விவகாரத்தை பற்றி பேச ஸ்டாலினுக்கு தகுதி இருக்கிறதா?
Loading...