தஞ்சாவூர் தொகுதியில் வெற்றி யாருக்கு ? தேர்தலுக்கு பிந்தைய பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவு வெளியானது.

தஞ்சாவூர்

தஞ்சாவூர் டெல்டா மாவட்டங்களின் தலைநகரம் , வயல்கள் மிகுந்த பொன் விளையும் பூமி , இந்த தஞ்சாவூர் காவேரி ஆற்று நீரை பெருமளவில் நம்பியிருப்பதால் காவேரி பிரச்னை இங்கு அரசியல் களத்தில் எதிரொலிக்கும்.

இந்த தொகுதியில் தஞ்சாவூர் , ஒரத்தநாடு , மன்னார்குடி , பட்டுகோட்டை , திருவையாறு , பேராவூரணி என 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது.

இந்த தஞ்சாவூர் தொகுதியை அதிமுக தனது கூட்டணி கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கியுள்ளது , தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் இந்த தொகுதியில் என் ஆர் நடராஜன் போட்டியிடுகிறார்.

திமுக இந்த தொகுதியில் நேரடியாக களமிறங்குகிறது திமுக சார்பில் இந்த தொகுதியில் முன்னாள் அமைச்சர் எஸ் எஸ் பழனிமாணிக்கம் களமிறங்கியுள்ளார்.

இதையும் படிக்க:  வார்டுக்கு 10 வாக்குகள் கூட இல்லை கம்யூனிஸ்ட்களை விரட்டிவிட திமுக முடிவு,..

தேர்தல் பிரச்சாரம் துவங்கியது முதலே இந்த தொகுதி திமுகவிற்கு சாதகமாவே இருந்தது , தமிழ் மாநில காங்கிரஸ் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடாதது ஒரு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.

அதுவே திமுலவிற்கு சாதகமாவும் உள்ளது தேர்தல் முடிந்த சூழலில் இந்த தொகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் 37 – 40 சதவீத வாக்குகளையும்.

திமுக 43 – 47 சதவீத வாக்குகளையும் பெறலாம் என்று தெரியவந்துள்ளது.

RESULT

ஒருவேளை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டிருந்தால் ஒரு கடும் போட்டி உருவாகியிருக்கலாம்.

ஆனால் அது நடக்கவில்லை அதனால் இந்த தொகுதியில் திமுகவின் எஸ் எஸ் பழனிமாணிக்கம் வெற்றிபெறுவது உறுதி.

இதையும் படிக்க:  ஒரே பேட்டி பனிமலரை வெளுத்து வாங்கிய H.ராஜா

©TNNEWS24

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று மெசேஜ் அனுப்பவும்.

Loading...