திருச்சி தொகுதியில் வெற்றி யாருக்கு ? தேர்தலுக்கு பிந்தைய பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள்

திருச்சி

திருச்சி மக்களவை தொகுதி இதில் திருச்சி மேற்கு , திருச்சி தெற்கு , கந்தர்வகோட்டை , ஸ்ரீரங்கம் , புதுக்கோட்டை , திருவெறும்பூர் உள்ளிட்ட 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது.

இந்த தொகுதியும் ஒரு நட்சத்திர வேட்பாளர் போட்டியிடும் தொகுதி திமுக கூட்டணி சார்பில் இந்த தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கியுள்ளனர்.

காங்கிரஸ் கட்சி சார்பில் இந்த திருச்சி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் திருநாவுக்கரசர் போட்டியிடுகிறார்.

இவர் எம்ஜிஆர் காலத்தில் அதிமுகவிலிருந்தார் அப்போது முதல்முறை சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்றபோதே சபாநாயகர் பதவிகிடைத்தது.

தமிழக அரசியல் வரலாற்றில் சபாநாயகராக ஆனா பின்னர் திருமணம் செய்தவர் இவர் மட்டுமே.

பின்னர் பாஜகவில் இணைந்து அதிலும் மத்திய அமைச்சராக இருந்துள்ளார் அதன் பின்னர் தான் காங்கிரஸ் கட்சிக்கு வந்துள்ளனர் திருநாவுக்கரசர்.

இதையும் படிக்க:  தீவிரவாதியை அடித்தால் உங்களுக்கு ஏன் வலிக்கிறது , கிழித்தெடுத்த மோடி

மறுமுனையில் அதிமுக இந்த தொகுதியை தனது கூட்டணி கட்சியான தேமுதிகவிற்கு ஒதுக்கியுள்ளது , தேமுதிக சார்பில் இந்த தொகுதியில் இளங்கோவன் என்பவர் போட்டியிடுகிறார்.

இந்த திருச்சி தொகுதியில் அமமுகவும் முக்கிய பங்கு வகிக்கிறது காரணம் அதன் வேட்பாளர் சாருபாலா ஆர் தொண்டைமான் அந்த பகுதியில் மிகவும் பிரபலமானவர்.

புதுக்கோட்டை சமஸ்தானத்தின் ராஜ குடும்பத்தை சார்ந்தவர் இந்த தொகுதியில் அதிமுக நேரடியாக களமிறங்கியிருந்தால் கடும் போட்டியாக அமைந்திருக்கும்.

ஆனால் தேமுதிகவுக்கு ஒதுக்கியது காங்கிரஸ் கட்சியின் வெற்றியை எளிமையாக்கிவிட்டது என்று தான் சொல்லவேண்டும்.

தேர்தல் முடிந்த சூழலில் இந்த திருச்சி தொகுதியில் காங்கிரஸ் கட்சி 45 – 48 சதவீத வாக்குகளையும் , தேமுதிக 35 -37 சதவீத வாக்குகளையும் , அமமுக 11 -14 சதவீத வாக்குகளையும் பெறலாம்.

இதையும் படிக்க:  வெட்கம் மானம் சூடு சொரணை யாருக்கு இல்லை என்று இப்போது தெரிகிறதா? பாமக கேள்வி அமைதியான ஸ்டாலின்.

result

திமுக கூட்டணிக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் இந்த திருச்சி தொகுதியிலிருந்து ஒரு உறுப்பினர் கிடைப்பது ஏறத்தாழ உறுதியாகிவிட்டது.

©TNNEWS24

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று மெசேஜ் அனுப்பவும்.

Loading...