தமிழகம் அதிக அளவில் எதிர்பார்த்து காத்திருக்கும் தூத்துக்குடி யாருக்கு செல்கிறது வெளியானது தேர்தலுக்கு பிந்தைய பிரமாண்ட கருத்து கணிப்பு முடிவு !

தூத்துக்குடி.,

ஒட்டுமொத்த தமிழகமும் எதிர்பார்க்கும் தொகுதியில் தூத்துக்குடி தொகுதியும் ஒன்று, தூத்துக்குடி தொகுதி நட்சத்திர அந்தஸ்தை பெறுவதற்கு காரணம் அங்கு இரண்டு நட்சத்திர வேட்பாளர்கள் நேரடியாக போட்டியிடுவதும் காரணமாக பார்க்கப்படுகிறது.

அதை தாண்டி திமுக மற்றும் பாஜக இரண்டு கட்சிகளும் இங்கு நேரடியாக போட்டியிடுவதும் பாஜக சார்பில் மாநில தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜனும் திமுக சார்பில் கனிமொழியும் போட்டியிடுவதால் தமிழகத்தின் மற்ற தொகுதிகளை தாண்டி அதிகம் கவனத்தை பெற்றுள்ளது.

தமிழிசையை பொறுத்தவரை தூத்துக்குடியில் அதிகம் வசிக்கும் பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்தவர், அதனை தாண்டி கூட்டணியில் உள்ள அதிமுக வாக்குகளை அதிகம் எதிர்பார்த்து களம் கண்டார்.

பாஜக சார்பில் களம் இறங்கியதால் ஸ்டெர்லைட், சிறுபான்மையினர் வாக்குகள் மற்றும் ஆட்சிக்கு எதிராக இருக்கும் வாக்குகள் தமிழிசைக்கு எதிராக திரும்பின, அதே நேரம் திமுகவை விரும்பாதவர்கள் தமிழிசை பக்கம் வந்திருக்கின்றனர்.

இதையும் படிக்க:  மல்லையாவுக்கு சொந்தமான தனி விமானத்தில் ராஜஸ்தான் பறந்த ஸ்டாலின் வாடகை எவ்வளவு தெரியுமா?

திமுகவை பொறுத்தவரை இந்த முறை நான் கலைஞரின் மகள் என்று கனிமொழி களம் இறங்கினாலும் அங்குள்ள சாதி அமைப்புகளின் ஆதரவு, சிறுபான்மையினர் ஆதரவு ஆகியவற்றை கருத்தில்கொண்டு களம் இறங்கினார்.

மேலும் திமுக ஆட்சிக்கு வந்ததும் ஸ்டெர்லைட் நிரந்தரமாக மூடப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தார். மேலும் முக்கிய தலைவரான கனிமொழி போட்டியிடுவதால் அனிதாராதாகிருஷ்ணன், கீதா ஜீவன் உள்ளிட்டோர் அருகிலேயே இருந்து வாக்கு கேட்டனர், மற்றும் களப்பணியினை ஆற்றினர்.

எளிதாக தூத்துக்குடியை கைப்பற்றி விடலாம் என்ற கனிமொழிக்கு இடியாய் விழுந்தது வீரமணியின் பேச்சு அதனால் தனது ட்விட்டர் புகைப்படத்தில் கூட பெரியாரை நீக்கிவிட்டார் கனிமொழி.

தமிழிசை மோடி ஜியா இல்லை 2 ஜியா என்று வாக்குகளை கேட்டார் அது மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க:  ஓலா கால் டாக்ஸி புக் செய்து துணிகரமாக கொள்ளை அடித்த திருடர்கள்!

result

தூத்துக்குடியை பொறுத்தமட்டில் விட்டமின் பணம் அதிகமாக பாய்ந்துள்ளது ஒரு வாக்கிற்கு 300 முதல் 1000 வரை கொடுக்கப்பட்டுள்ளது.

இறுதிக்கட்டத்தில் பாய்ந்த பணம் தமிழிசைக்கு எதிராக மாறியுள்ளது, எளிதில் வெற்றிபெறுவோம் என்ற கனிமொழியால் அவ்வளவு சுலபத்தில் அதனை அடையமுடியவில்லை இறுதிக்கட்ட நிலவரப்படி கனிமொழி குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தூத்துக்குடியை கைப்பற்றுகிறார்.

பெரியார் பெயரை ஒரு இடத்திலும் பயன்படுத்தாமல் வாக்கு கேட்டது.

கோவில் கோவிலாக கனிமொழி ஏறி இறங்கியது.

நெற்றி நிறைய குங்குமத்தை வைத்துக்கொண்டு வாக்கு சேகரித்தது, ஆகியவை இந்த தேர்தலில் தமிழிசைக்கு கிடைத்த வெற்றியாக இருக்கும்.

©TNNEWS24

Loading...