திருநெல்வேலி தொகுதியில் வெற்றி யாருக்கு ? தேர்தலுக்கு பிந்தைய பிரமாண்ட கருத்துக்கணிப்பு?

திருநெல்வேலி

திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதி தென் தமிழகத்தில் ஒரு முக்கிய தொகுதி இந்த தொகுதி ஆலங்குளம் , திருநெல்வேலி , பாளையங்கோட்டை , அம்பாசமுத்திரம் ,நாங்குநேரி , ராதாபுரம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது.

இந்த தொகுதியில் அதிமுக சார்பில் டாக்டர் பி ஹெச் பால் மனோஜ் பாண்டியன் போட்டியிடுகிறார் இவர் அதிமுக முன்னாள் அமைச்சர் பி ஹெச் பாண்டியனின் மகனாவார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் உயிருடன் இருக்கும்போதே பி ஹெச் பாண்டியன் அவர்களின் குடும்பத்தாருக்கு அதிமுகவில் அதிக முக்கியதுவம் இருந்தது.

திமுக சார்பில் இந்தத்தொகுதியில் எஸ் ஞானதிரவியம் அவரை எதிர்த்து களமிறங்கியுள்ளார், மேலும் இந்த தொகுதியில் களமிறங்கும் இன்னொரு முக்கிய வேட்பாளர் அமமுகவின் மைக்கேல் ராயப்பன்.

இதையும் படிக்க:  மதம் மாற மறுத்து உயிரை விட்ட தாய் தந்தை மதமாற்ற தடுப்பு சட்டத்தை அமல்படுத்த எச்சரிக்கை.

தென் மாவட்டங்களில் அமமுக சற்று வலுவாக இருப்பதால் அதுவும் குறிப்பிட்டளவு வாக்குகளை பிரிக்கிறது.

இந்த தொகுதி ஆரம்பம் முதலே திமுகவிற்கு சாதகமாகவே சென்றது ஆனால் இறுதிக்கட்டத்தில் அதிமுக சற்று முன்னேறியது. அது வெற்றிக்கு தேவையான வாக்குகளை பெற முடியவில்லை.

தேர்தல் முடிந்த சூழல் நமது கணிப்பின்படி இந்த தொகுதியில் திமுக 42 -44 சதவீத வாக்குகளையும் , அதிமுக 37 -40 சதவீத வாக்குகளையும் அமமுக 10 – 12 சதவீத வாக்குகளையும் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த திருநெல்வேலி தொகுதியில் அதிமுக என்ன தான் வலுவான வேட்பாளரை நிறுத்தினாலும் திமுகவே வெற்றிபெறும் என்ற சூழல் தான் நிலவுகிறது.

Result.

இதையும் படிக்க:  கூட்டணி கட்சியை பிரிக்க உத்தரவிட்ட ஸ்டாலின் நாரதர் வேலையை தொடங்கிய ஊடகங்கள்.

அதிமுகவின் வாக்குகளை தினகரன் பிரிந்திருப்பது களத்தில் திமுகவிற்கு சாதகமாக அமைந்துள்ளது.

©TNNEWS24

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று மெசேஜ் அனுப்பவும்.

Loading...