இந்த ஆண்டு IPL கோப்பையை வெல்லப்போகும் அணி எது 2018 – சரியாக கணித்த பிரபல ஜோதிடர் ஜோதிசிவம் கணிப்பு

இந்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது மொத்தமுள்ள 8 அணிகளில் 4 அணிகள் மட்டுமே பிலே ஆப் சுற்றுக்கு தகுதிபெறும்.

ஏற்கனவே சென்னை , டெல்லி மற்றும் மும்பை ஆகிய அணிகள் பிலே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்ற நிலையில் 4 ஆம் இடத்தை பிடிக்க ஹைதராபாத், கொல்கத்தா , பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகள் போட்டிபோடுகின்றன.

இந்த 4 அணிகளில் ஏதேனும் ஒரு அணி மட்டுமே பிலே ஆப் சுற்றுக்கு வரமுடியும் , இது ஒருபுறம் இருக்க கடந்த ஆண்டு சென்னை அணி தான் கோப்பையை வெல்லும் என்று சரியாக முன்னரே கணித்து சொன்னவர் ஜோதிடர் ஜோதிசிவம்.

இவர் இந்த ஆண்டு எந்த அணி கோப்பையை வெல்லும் என்ற தனது கணிப்பை வெளியிட்டுள்ளார் அதன்படி இந்த ஆண்டு இறுதி போட்டியில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதும் என்று கூறியுள்ள அவர்.

இதையும் படிக்க:  இன்று உங்கள் ராசி பலன் எப்படி இருக்கிறது தெரிந்து கொள்ளுங்கள் !

மே 12 இரவு 7 மணிக்கு இந்த ஆண்டிற்கான ஐபிஎல் இறுதிப்போட்டி துவங்கும் அந்த நேரத்தில் உள்ள கோள்களின் அமைப்பு , சென்னை அணியின் கேப்டன் தோனியின் ஜாதக அமைப்பு , மும்பை அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மாவின் ஜாதக அமைப்பு

உள்ளிட்டவற்றை கொண்டு ஜோதிசிவம் கணித்த கணிப்பின்படி இந்த ஆண்டு ஐபிஎல் இறுதி போட்டியில் சென்னை , மும்பை ஆகிய அணிகளில் முதலில் பேட்டிங் செய்யும் அணியே வெற்றிபெறும்

என்று உறுதியாக கணித்துள்ளார்.

சென்ற ஆண்டு சென்னை என சரியாக கணித்தவர் இந்த ஆண்டு போட்டிக்கு முந்தைய தினம் சென்னையா அல்லது மும்பையா என தெளிவாக கூறுவதாகவும் நம்மிடம் தெரிவித்துள்ளார்.

©TNNEWS24

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.

இதையும் படிக்க:  வெளியானது உலகக்கோப்பைக்கான இந்திய அணி வீரர்களின் பட்டியல் தமிழக வீரர்களுக்கு முக்கியத்துவம் !
Loading...