சிவகங்கையில் யாருக்கு வெற்றி தேர்தலுக்கு பிந்தைய நிலவரம் என்ன?

சிவகங்கையில் யாருக்கு வெற்றி தேர்தலுக்கு பிந்தைய நிலவரம் என்ன?

சிவகங்கை.,

நாடாளுமன்ற தேர்தலில் இந்த முறை சிவகங்கையில் H ராஜா போட்டியிடுவதால் நட்சத்திர அந்தஸ்தை சிவகங்கை தொகுதி பெற்றுள்ளது.

பாஜக சார்பில் H ராஜாவும், காங்கிரஸ் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் மகன் கார்த்தி சிதம்பரமும், தினகரன் கட்சியின் சார்பில் தேர்போகி பாண்டியும் தேர்தலில் களம் கண்டனர்.

வேட்பாளர்கள் மூவருமே காரைக்குடி, தேவகோட்டை சுற்று வட்டார பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும் இங்கு கவனிக்கத்தக்க ஒன்று மேலும் அமமுக சார்பில் களம் இறங்கியுள்ள வேட்பாளர் கள்ளர் சமூகத்தை சேர்ந்தவர் எனவே இவர் முக்குலத்தோர் வாக்குகளை குறிவைத்து தனது வியூகத்தை வகுத்திருந்தார், மேலும் தினகரனின் சொந்த சமூகம் என்பதால் அந்த சமூகத்தை சேர்ந்த இளைஞர்கள் அதிக அளவில் பாண்டிக்கு ஆதரவாக தேர்தலில் பணியாற்றினர்.

இதையும் படிக்க:  தமிழ் நாட்டை கொள்ளை அடித்தவர்களை உங்கள் துணையுடன் சிறையில் தள்ளுவேன் - மோடி

இருப்பினும் இங்கு தினகரனின் கட்சியை தாண்டி கிராமங்களில் இரட்டை இலைக்கு அனைத்து சமுதாயத்தினர் இடையேயும் ஆதரவு உண்டு குறிப்பாக இங்கு யாதவர், பிள்ளைமார் மற்றும் விஸ்வகர்மா சமூகத்தை சேர்ந்தவர்கள் அதிக அளவில் வசிக்கின்றனர். இவர்களை வைத்தே களத்தில் இந்தமுறை வெற்றி தோல்வி நிச்சயிக்கப்படுகிறது.

செட்டிநாடு பகுதிகளில் கார்த்தி சிதம்பரத்திற்கு என்று ஆதரவான வாக்குகள் உள்ளன, மேலும் திமுக கூட்டணி மற்றும் காங்கிரஸ் வாக்குகள் கார்த்தி சிதம்பரத்திற்கு அப்படியே கிடைக்கும் என்றே தெரியவருகிறது, மேலும் சிறுபான்மையினர் வாக்குகள் அதிக அளவில் இந்த கூட்டணிக்கே கிடைத்திருக்கிறது.

பாஜகவை பொறுத்தவரை இங்கு தனியாக சென்ற நாடாளுமன்ற தேர்தலில் 1. 3 லட்சம் வாக்குகள் பெற்றிருக்கிறது, மேலும் போனமுறை அதிமுக 4 லட்சம் வாக்குகள் பெற்றிருக்கிறது. இதில் பாஜகவிற்கு 2 இருந்து 2.5 லட்சம் வாக்குகள் கிடைத்தால் வெற்றி பெறலாம் என்று கணக்கிட்டு தேர்தல் பணியினை மேற்கொண்டது.

இதையும் படிக்க:  எங்ககிட்டயும் அணுகுண்டு இருக்குனு பாகிஸ்தான் இனி மிரட்ட முடியாது எ சாட் செயற்கைகோள் வைத்த ஆப்பு மோடிக்கு கிடைத்த வெற்றி

இறுதியில் தேர்தலுக்கு பின்பான களம் நிலவரப்படி இந்த முறை தினகரனின் அமமுக 22- 24 சதவிகித வாக்குகளை சிவகங்கையில் பெறுகிறது இங்கு தினகரனுக்கு கிறிஸ்தவர்கள் வாக்குகள் அதிகம் கிடைத்துள்ளன இது காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் ராஜாவிற்கு பொதுவான சமூகத்தினர் அதிகம் வாக்களித்திருப்பது தெரியவந்துள்ளது, குறிப்பாக சிவகங்கையில் அதிகம் வசிக்கும் முக்குலத்தோர் பிரிவில் ஒன்றான அகமுடையார் வாக்குகள் இந்த முறை 60% ராஜாவிற்கு கிடைத்திருக்கிறது.

கார்த்தியை பொறுத்தவரை வல்லம்பர் சமூகத்தின் மொத்த வாக்குகளை அதிகம் பெற்றிருக்கிறார் மேலும் இஸ்லாமியர்களின் வாக்குகளையும் பெற்றிருக்கிறார் இறுதியாக சிவகங்கையில் ராஜாவிற்கும் , கார்த்தி சிதம்பரத்திற்கு இடையே தற்போதைய நிலையில் போட்டி நிலவுகிறது.

இங்கு H. ராஜா அல்லது கார்த்தி இருவரில் ஒருவர்தான் வெற்றிபெற வாய்ப்பு இருக்கிறது. தினகரனின் கட்சியை சேர்ந்த தேர்போகி பாண்டி அதிமுகவின் வாக்குகளை பிரிக்க மட்டுமே பயன்பட்டிருக்கிறார். பாண்டி பிரிக்கும் வாக்குகள் 25 % அதிகமாக சென்றால் ராஜாவிற்கு அது எதிராக அமையும் என்றே தெரிகிறது.

இதையும் படிக்க:  மல்லையாவுக்கு சொந்தமான தனி விமானத்தில் ராஜஸ்தான் பறந்த ஸ்டாலின் வாடகை எவ்வளவு தெரியுமா?

தற்போது சிவகங்கை தொகுதியில் பாஜக மற்றும் காங்கிரஸ் இரண்டும் சரிசமமான நிலையில் உள்ளன எனினும் தினகரனின் வேட்பாளர் இந்த தொகுதியில் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக இருப்பாரே தவிர வெற்றிபெற மாட்டார்.

இதுதான் சிவகங்கையின் தேர்தலுக்கு பிந்தைய தற்போதைய களம் நிலவரம்.

குறிப்பு கார்த்தி சிதம்பரம் வெற்றிபெறும் பட்சத்தில் அவர் மீதுள்ள வழக்குகளில் விரைவில் தீர்ப்பு வர இருப்பதால் நிச்சயம் இடைத்தேர்தலை சந்திக்கக்கூடிய நிலையிலும் சிவகங்கை தொகுதி செல்லவும் அதிக வாய்ப்புகள் இருப்பதாக பேச்சுக்கள் வந்தவண்ணமும் உள்ளன.

©TNNEWS24

Loading...