எந்த அணி உலகக்கோப்பையை வெல்லும் அதற்கு சச்சின் சொன்ன காரணம் என்ன?

எந்த அணி உலகக்கோப்பையை வெல்லும் அதற்கு சச்சின் சொன்ன காரணம் என்ன?

மும்பை.

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் இந்த முறை இந்திய அணி உலகக்கோப்பையை வெல்லும் என்றும் இங்கிலாந்தின் வானிலை நமக்கு சாதகமாக அமையும் என்பதால் நிச்சயம் இந்திய அணி உலகக்கோப்பையை வெல்லும் என்றும் சொல்லியுள்ளார்.

மும்பையில் M.I.G கிரிக்கெட் கிளப்பில் சச்சின் பெயர் சூட்டப்பட்ட அரங்கை சச்சின் திருந்து வைத்தார்  அப்போது பேசிய சச்சின் டெண்டுல்கர், இங்கிலாந்தின் வானிலை மற்றும் மைதானத்தின் நிலை ஆகியவை இந்தியாவுக்குச் சாதகமாக இருக்கும் என்று கூறினார்.

அங்கு பந்துவீச்சாளர்களுக்கு சாதகமான சூழல் நிலவும் இருப்பினும்,  இந்த முறை பேட்டிங் செய்வதற்கே மைதானத்தில் சூழல் சிறப்பாக இருக்கும் என்று கணித்துள்ளார். இந்திய வீரர்கள் சூழலுக்கேற்ப தங்களை மாற்றிக் கொள்வார்கள் என்று   பாராட்டிய சச்சின், இந்த முறை உலகக்கோப்பை இந்தியாவுக்கு வந்து சேரும் என்றும் நமது வீரர்கள் வெற்றியுடன் உலகக்கோப்பையை வென்று வருவார்கள் என்றும் சச்சின் ஆணித்தரமாக கூறியுள்ளார்.

இதையும் படிக்க:  இந்த 4 அணிகள் தான் உலககோப்பை அரை இறுதிப்போட்டிக்கு செல்லும் - கங்குலி கணிப்பு.

©TNNEWS24

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.

Loading...