மத்திய சென்னையை கைப்பற்றப்போவது யார்? சாம்பவுலா தயாநிதியா வெளியானது பிரமாண்ட சர்வே முடிவு.

மத்திய சென்னையை கைப்பற்றப்போவது யார்? சாம்பவுலா தயாநிதியா வெளியானது பிரமாண்ட சர்வே முடிவு.

மத்திய சென்னை

தமிழகத்தில் உள்ள நாடாளுமன்ற தொகுதிகளில் சிறிய தொகுதி மத்திய சென்னைதான் . சென்னையில் திமுகவுக்கு என்று மிக வலிமையான வாக்கு வங்கி உள்ள தொகுதி மத்தியசென்னை.

இதனால் பலத் தேர்தல்களில் திமுக நேரடியாக களம் இறங்கி மத்திய சென்னையில் வெற்றி பெற்றுள்ளது. திமுகவின் முக்கிய மூத்த தலைவர்கள் டாக்டர் கலாநிதி, முரசொலி மாறன், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் ஆகியோர் போட்டியிட்டு வென்ற தொகுதிதான் இந்த மத்திய சென்னை.

மத்திய சென்னை நாடாளுமன்றத்திற்கு உட்பட்ட 6 சட்டசபை தொகுதிகளையும் திமுக தன் வசம் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:  மாணவர்களை வெற்றிபெறவைக்க வக்கில்லை சம்பளஉயர்வு தேவையா விழுப்புரத்தில் தரமான சம்பவம்

இந்த முறை களத்தில் இறங்கிய வேட்பாளர்கள் பட்டியல்

சாம் பால் (பாமக)

தயாநிதி மாறன் (திமுக)

கார்த்திகேயன் (நாம் தமிழர்)

தெஹலான் பார்கவி (எஸ்டிபிஐ)

கமீலா நாசர் (மநீம)

இந்த தேர்தலில் எளிதில் வெற்றி பெற்றுவிடலாம் என்று நினைத்திருந்த தயாநிதிமாறனுக்கு, அதிர்ச்சி காத்திருந்தது, குறிப்பாக தமிழகத்தில் குறைவான வாக்குகள் பதிவான தொகுதிகளில் மத்திய சென்னையும் ஒன்று.

இங்கு இஸ்லாமியர்களின் வாக்குகளை, அமமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் sDPI கட்சியினர் கணிசமாக பிரிந்திருப்பது திமுகவிற்கு பாதகமான சூழலை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரம் மற்றொரு தொழிலதிபரான சாம்பால் கடுமையாக தயாநிதிமாறனுக்கு நெருக்கடி கொடுத்திருக்கிறார்.

RESULT.

மத்திய சென்னையை பொறுத்தமட்டில் இரண்டு தொழில் அதிபர்களிடையே நேரடியான போட்டியாகத்தான் அமைந்திருக்கிறது, கடைசி நேரத்தில் ஆளும் கட்சியின் மீதுள்ள அதிருப்தி பாமாவிற்கு எதிராகவும், திமுகவிற்கு சாதகமாகவும் அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த தொகுதியை திமுக கைப்பற்றுவதற்கே 90% வாய்ப்புகள் உள்ளன.

இதையும் படிக்க:  9 பேரையும் தூக்கில் போட சொல்லி ஒற்றை காலில் நிற்கும் தமிழகம். பெண்களின் வாழ்க்கையில் அரசியல் செய்யும் திமுகவினர்.

©TNNEWS24

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.

Loading...