இப்போ தடுத்துபார் யோகி மேற்குவங்கம் பயணம் ! மம்தா காயத்ரி மந்திர போட்டிக்கு அழைப்பு !

இப்போ தடுத்துபார் யோகி மேற்குவங்கம் பயணம் ! மம்தா காயத்ரி மந்திர போட்டிக்கு அழைப்பு !

மேற்கு வங்கம்

உத்திரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தேர்தல் பரப்புரைக்காக மேற்கு வங்கம் செல்ல இருக்கிறார். இந்த முறை தனது பயண திட்டம் குறித்த அறிவிப்பினை நாளை வெளியிட இருக்கிறார் யோகி.

ஆனால் தனது முதல் பிரச்சாரத்தை மேற்கு வங்கத்தில் இருந்து தொடங்குவார் என்றே தெரிகிறது காரணம் லக்னோவில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த யோகி இந்த முறை மேற்குவங்கம் ஹெலிஹாப்டரில் செல்ல இருக்கிறேன் மம்தா தடுக்கட்டும் என்று சவால் விடுத்தார்.

அவர் அப்படி சவால் விட்டதற்கு காரணம் அன்று அமிட்ஷா மேற்குவங்கம் சென்றபோது மம்தாவிற்கு எச்சரிக்கை ஒன்றினை விடுத்திருந்தார் அதில் இன்று எங்கள் கட்சியினர் பயணத்தை தடுத்த மம்தாவின் கட்சியினர் நாளை அவருடன் இருக்கமாட்டார்கள் என்றார்.

இதையும் படிக்க:  தெறிக்கவிடும் தமிழக அரசு பயத்தில் அரசு ஆசிரியர்கள் , அரசை ஆதரிக்கும் இளைஞர்கள்

அவர் சொன்னதுபோலவே இதுவரை திரிணாமூல் கட்சியில் இருந்து 5 MLA மற்றும் 6 MP மற்றும் முக்கிய கட்சி தலைவர்கள் பாஜகவில் தங்களை இணைத்துக்கொண்டனர். இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது தேவையில்லாமல் மம்தா பாஜகவை வம்பிழுத்ததே என்கின்றனர்.

இப்போது யோகி அதனை மனதில் வைத்துதான் தடுத்து பார் என்று சவால் விட்டுருக்கிறார். குறிப்பாக முன்னர் மேற்கு வங்கம் சென்ற யோகி இந்துக்கள் வாக்கு வங்கி உருவானால் இன்று துர்கா பூஜையை நிறுத்தும் மம்தா நாளை காயத்ரி மந்திரம் பாடிக்கொண்டு வாக்கு சேகரிப்பார் என்றார் அதுபோலவே இன்று நடந்துள்ளது.

மம்தா தனது கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கலாச்சார கூட்டத்தில் நான் மோடி, அமிட்ஷா இருவரை காட்டிலும் சம்ஸ்கிருதத்தில் காயத்ரி மந்திரத்தை பாடுவேன் சவாலுக்கு ரெடியா? என்று கேட்டிருக்கிறார்.

இதையும் படிக்க:  காஷ்மீரில் 100 கம்பெனிகளை சேர்ந்த CRPF வீரர்கள் குவிப்பு நீக்கப்படுகிறது தீவிரவாதத்திற்கு காரணமான 370A அதிரடிக்கு தயாரான மோடி

இதனை நெட்டிசன்கள் வசமாக கிண்டல் செய்து வருகின்றனர் ஒரு வேலை யோகி சொன்னது நடந்துவிட்டதோ என்றும் சொல்லி வருகின்றனர்.

முன்பு தமிழகத்தில் இந்துக்கள் வாக்கு வங்கி உருவாகிவிட்டால் கருணாநிதி பஜனை பாடிக்கொண்டும் வாக்கு சேகரிப்பார் என்று சொல்லியது குறிப்பிடத்தக்கது.

©TNNEWS24

Loading...