Youturn போலி நடுநிலைக்கு facebook கொடுத்த அடி இனி வாயில் வடை மட்டும்தான் சுடலாம் விரட்டி அடித்த பரிதாபம்.

Youturn போலி நடுநிலைக்கு facebook கொடுத்த அடி இனி வாயில் வடை மட்டும்தான் சுடலாம் விரட்டி அடித்த பரிதாபம்.

சென்னை.

சமூக வலைத்தளங்களில் பரவும் போலி செய்திகளை கண்டறிந்து அடையாளம் காண ஆரம்பிக்கப்பட்ட பக்கமாக தன்னை அடையாளப்படுத்திக்கொண்டு youturn எனும் ஒரு வலைத்தளம் தமிழகத்தில் உள்ளது.

இணையத்தில் பரவும் போலி செய்திகளை கண்டறிந்து சொல்வதாக தன்னை தானே பிரபலப்படுத்தி கொண்ட ஒரு நிறுவனம் என்றும் சில குறிப்பிட்ட தமிழக கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் பலரும் அவரது facebook பக்கத்திலேயே குறை சொல்லி வந்தனர்.

நிலைமை இப்படி இருக்க facebook நிர்வாகம் இணையத்தில் பரவும் போலி செய்திகளை கண்டறிந்து அடையாள படுத்துவதற்காக, இந்தியாவில் ‘IFCN’ certificate கொண்ட 7 வலைத்தளங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது.

இதையும் படிக்க:  இறந்த பிறகும் திருட்டில் ஈடுபட்டாரா கருணாநிதி? ஆதாரம் இருப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் குற்றசாட்டு:

இதில் தானும் இடம்பெற வேண்டும் என்று இந்த youturn இணையதளமும் முயற்சித்ததாகவும், ஆனால் நீங்கள் நடுநிலையாக செயல்படவில்லை, ஒரு கட்சிக்கு ஆதரவாக இருப்பதாக கூறி IFCN அனுமதிக்கு விண்ணப்பித்த விண்ணப்பத்தை பரிசீலனைக்கு கூட ஏற்காமல் விரட்ட பட்டதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

இதில் மிக பெரிய கொடுமை என்ன வென்றால், திமுக முன்னாள் அமைச்சர் ஜெகத் ரட்சகன் இலங்கையில் தனது குடும்பத்தினர் பெயரில் 26000 கோடிக்கு மேல் சிங்கப்பூர் கம்பெனியின் மூலம், முதலீடு செய்தது இந்திய அளவில் அனைத்து ஊடகங்களிலும் இடம்பெற்றது.

ஆனால் அதை இந்த youturn பக்கம் ஆடு பகை குட்டி உறவு என்ற பாணியில் ஒரு கதை விட்டு அந்த நிறுவனத்தில் ஜெகத்ரட்சகன் உரிமையாளர் அல்ல அவரது மகன்தான் உரிமையாளர் என்று ஒரு புது விளக்கத்தை கொடுத்து மக்களை சிரிப்பில் ஆழ்த்தியது. சரி அவரது மகனிற்கு பணம் எங்கிருந்து வந்தது இந்த youturn so called நடுநிலை ஊடகத்திற்கு தெரியுமா என பலரும் கமெண்ட்களில் கிண்டல் செய்து வருகின்றனர்.

இதையும் படிக்க:  கூட்டணி கட்சியை பிரிக்க உத்தரவிட்ட ஸ்டாலின் நாரதர் வேலையை தொடங்கிய ஊடகங்கள்.

இப்படி பட்ட இணையத்தளம் எங்கே உண்மையை சொல்லப்போகிறது என்ற நோக்கத்தில் IFCN அங்கீகாரம் கொடுக்கவில்லை என்றும் இனி வழக்கம் போல் கட்டுக்கதைகளை சுட்டிக்காட்டி வாயில் வடை மட்டுமே சுடலாம், என்றும் பலர் கேலிசெய்துள்ளனர்.

மேலும் இந்த இணையதளத்திற்கு உண்மையில் தமிழர்கள் நலனில் அக்கறை இருந்தால் இந்த 4 கேள்விக்கு பதில் சொல்லமுடியுமா என்றும் கேட்டுள்ளனர்.

  • திமுக தலைவர்களில் ஒருவரான தா. கிருட்டிணன் கொல்லப்பட்டது எப்படி யார் கொன்றது?
  • YOUTURN இணையத்தின் மூலம் கிடைக்கும் மாத வருமானம் எவ்வளவு? எங்கிருந்து யாரிடம் இருந்து கிடைக்கிறது.
  • எந்த காரணத்திற்காக IFCN அங்கீகாரம் கிடைக்கவில்லை
  • தமிழகத்தில் யாருடைய ஆட்சியில் மின்தடை அதிகமாக இருந்தது இதற்கு காரணம் என்ன?
இதையும் படிக்க:  அடக்க முயன்ற வீரரின் ட்ரவுசரை கழட்டி களத்தில் ஓடவிட்டு காளை வீடியோ ?

இப்படியான நான்கு கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

இதற்கு உண்மையில் தன்னை நடுநிலை என்று சொல்லி கொள்ளும் இந்த youturn பக்கம் உண்மையை சொல்லுமா இல்லை பலர் இணையத்தில் சொல்லிவருவது போல் தன்னை ஒரு கட்சி சார்பாக செய்திகளை வெளியிடும் போலி ஊடகம் என்று நிருபணம் செய்யுமா என்று பார்ப்போம்.

Pavithra saravanan
Editor
TNNEWS24

…………

Loading...