காங்கிரஸ் ஒரு தொகுதிகூட பெறாமல் வாஷ் அவுட் ஆகும் மாநிலங்கள் லிஸ்ட் தெரியுமா?

காங்கிரஸ் ஒரு தொகுதிகூட பெறாமல் வாஷ் அவுட் ஆகும் மாநிலங்கள் லிஸ்ட் தெரியுமா?

சமூகவலைத்தளம்.,

நாடாளுமன்ற தேர்தல் இறுதி கட்டத்தை எட்டி வருகிறது, நாடு முழுவதும் 4 கட்ட தேர்தல்கள் இதுவரை மேற்குவங்கத்தை தவிர மற்ற மாநிலங்களில் அமைதியாக நடந்து முடிந்துள்ளன இன்னும் மூன்று கட்ட தேர்தல்கள் மட்டுமே பாக்கியுள்ள நிலையில் தேர்தல் முடிவுகள் வருகின்ற மே 23 அன்று வெளியாகியிருக்கின்றன.

இந்த சூழலில் நாடு முழுவதும் தேர்தலுக்கு முன்பு வெளியான கருத்து கணிப்புகள், மற்றும் 4 கட்ட தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளின்படி காங்கிரஸ் எந்தெந்த மாநிலங்களில் ஒரு தொகுதிகளில் கூட வெற்றி பெறாது என்று பார்க்கலாம்.

மேற்குவங்கம் – மேற்குவங்கத்தில் திரிணமூல், பாஜக, இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டாலும் பிரதான போட்டி இங்கு மம்தா மற்றும் பாஜக இடையேதான்.
இங்கு தேர்தலுக்கு முந்தைய மற்றும் தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம்கூட கிடைக்காது.

இதையும் படிக்க:  லேசா கைல வெட்டுனாங்க ராமலிங்கம் செத்துப்போயிட்டாரு இதில் அவர்கள் தவறு ஏதும் இல்லை.. திருமாவளவன் வெறி பேச்சு

ஆந்திரா – ஆந்திர மாநிலத்தை பொறுத்தவரை காங்கிரஸ் தனது அரசியல் செல்வாக்கை இழந்துவிட்டது என்றே பலராலும் தேர்தலுக்கு முன்பே சொல்லப்பட்ட செய்தி இங்கு ஜெகன் மோகன் மற்றும் சந்திரபாபு நாயுடு இடையே மட்டும்தான் போட்டி இங்கும் காங்கிரஸ் ஒரு தொகுதியையும் வெல்லவாய்ப்பே இல்லை.

டெல்லி – ஆம் ஆத்மீ மற்றும் காங்கிரஸ் வாக்குகள் பிரிவதால் டெல்லியின் அனைத்து தொகுதிகளையும் பாஜக வெல்லவே வாய்ப்பு இருப்பதாகவும், இதனை டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் நேரடியாக மக்கள் மத்தியிலேயே கூறி இருபது குறிப்பிட தக்கது இங்கும் காங்கிரஸ் ஒரு தொகுதியையும் வெல்ல வாய்ப்பில்லை.

உத்தரகண்ட்

உத்தரகண்ட் மாநிலத்தில் பிரதான எதிர்க்கட்சியாக காங்கிரஸ் இருந்தாலும் தொகுதியை வெல்லும் அளவிற்கு அதற்கு செல்வாக்கு இல்லாதது காங்கிரஸ் இங்கு ஒரு தொகுதியை கூட வெல்ல வாய்ப்பில்லை என்றே அனைத்து கருத்து கணிப்புகளும் தெரிவித்திருந்தன.

இதையும் படிக்க:  இந்திய நாட்டின் அடுத்த பிரதமர் யார் ? பலமுறை எதிர்காலத்தை சரியாக கணித்த க்ரீன்ஸ்டோன் லோபோ வெளியிட்ட கணிப்பு !

ஹரியானா.,

உத்தரகண்ட் மாநிலத்தை போல ஹரியாணாவிலும் காங்கிரஸ் ஒரு தொகுதிகளை கூட வெல்ல வாய்ப்பில்லை.

கேரளா, பஞ்சாப், சத்தீஸ்கர், போன்ற மாநிலங்களில் காங்கிரஸ் அதிக இடங்களை கைப்பற்றும் என்றும் தெரியவந்துள்ளது.

©TNNEWS24

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.

Loading...