இந்தியர்களை பற்றி கருத்து ஒன்றை பதிவிட்ட இங்கிலாந்து நிறுவனம் இப்போ ட்விட்டரில் இது தான் ட்ரெண்ட் !

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

இங்கிலாந்தை தலைமையகமாக கொண்டு இயங்கும் நிறுவனம் ஜேசிபி ( JCB ) என்னும் தோண்டும் இயந்திரம் அந்த இயந்திரம் நமது நாட்டில் மிகவும் பிரபலம்.

இந்நிலையில் நேற்று முதல் இந்த ஜேசிபி இயந்திரத்தை வைத்து பல மீம்கள் பரவியது , அதிலும் குறிப்பாக 90 களில் பிறந்த சிறுவர்கள் சிறு வயதில்.

நமது ஊருக்கு ஒரு ஜேசிபி இயந்திரம் வந்தால் அனைத்து சிறுவர்களும் ஓடி சென்று பார்ப்பது பற்றிய பல மீம்கள் அனைத்து சமூக வலைத்தளங்களிலும் வைரலாக பரவியது.

அந்த மீம்கள் ட்விட்டரில் உலக அளவில் ட்ரெண்ட் ஆனதால் அதை பார்த்த இங்கிலாந்தின் ஜேசிபி நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு ட்விட்டை பதிவிட்டுள்ளது அதில்,

Loading...
READ  இளம் பெண்ணை திருமணம் செய்த வெள்ளயங்கிரி தாத்தா ! பெரியாருடன் ஒப்பிடவேண்டாம் என கோவம் !

இந்திய மக்கள் ஜேசிபி மீது காட்டும் அன்பு எங்களை மனம் நெகிழ வைக்கிறது , நமது ஜேசிபி தற்போது நாடு முழுவதும் ட்ரெண்ட் ஆகி உள்ளது , ஜேசிபியின் வாடிக்கையாளர்கள் மற்றும் ரசிகர்களுக்கு எங்களது சிரம் தாழ்ந்த நன்றிகள் என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் ட்விட்டர் மொமெண்ட் என்ற ட்விட்டரின் அதிகாரப்பூர்வ பக்கமும் ஒரு டீவீட்டை பதிவிட்டுள்ளது, அதில் ஏன் ட்ரெண்ட் ஆனாது எப்படி ட்ரெண்ட் ஆனது என்று தெரியவில்லை ஆனால் ஜேசிபி தான் இந்தியா முழுவதும் ட்ரெண்ட் என்று தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here