இனி இந்திய அணியின் நிறம் நீளம் அல்ல காவி , உலக கோப்பையில் காவி உடையில் கலக்கப்போகும் இந்திய அணி

0

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் வரும் 30 ஆம் தேதி முதல் இங்கிலாந்தில் துவங்கவுள்ளது , அனைத்து அணிகளும் ஏற்கனவே இங்கிலாந்து சென்ற நிலையில் நேற்றுமுதல் பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றனர்.

இன்று நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளனர் , இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒரு புதிய விதிமுறையை கொண்டுவந்துள்ளது.

அதன்படி இரு அணிகள் விளையாடும்போது ஒரே நிறத்திலான ஆடையுடன் விளையாடக்கூடாது உதாரணமாக இங்கிலாந்து , இந்தியா , இலங்கை , ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளின் ஆடைகள் ஊதா நிறத்தில் இருக்கும்.

பாகிஸ்தான் , தென் ஆப்பிரிக்கா , பங்களாதேஷ் ஆகிய நாடுகளின் ஆடைகள் பச்சை நிறத்தில் இருக்கும் அதனால் அனைத்து அணிகளும் தங்களுக்கென ஒரு மாற்று உடையை தேர்வுசெய்துகொள்ள வேண்டும்.

இந்த காரணத்தால் இந்திய அணி தனது மாற்று உடையை அறிவித்துள்ளது காவி நிறத்திலான அந்த மாற்று உடைக்கான அறிவிப்பை பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது

அதன்படி இந்தியா இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிடம் விளையாடும் போட்டிகளில் காவி நிறத்திலான உடையுடன் விளையாடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காவி உடைக்கு வடமாநிலங்களில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் தமிழகத்தில் சிலர் இது மத்திய பாஜக அரசின் திட்டமிட்ட செயல்

ஹிந்துத்துவ கொள்கைகளைக்கொண்ட பாஜக அரசு திட்டமிட்டு காவியை திணிக்கிறது என்று சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர் ஆனாலும் இந்தியா முழுவதும் இந்திய காவி அடைக்கு ஆதரவு பெருகியுள்ளது.

©TNNEWS24

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here