கடவுள் இருக்கான் குமாரு சபரிமலைக்கு சென்ற பெண்கள் இப்போது என்ன நிலையில் இருக்கிறார்கள் பாருங்கள் !!!

சபரிமலை ஐயப்பன் சந்நிதானத்திற்கு பெண்கள் செல்லலாம் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது, இதையடுத்து பெண்கள் ஐயப்பன் கோவிலுக்கு செல்லலாம் என அம்மாநில அரசு உத்தரவிட்டதுடன், அங்கு செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் எனவும் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான கம்யூனிஸ்ட் அரசு உத்தரவிட்டது.

இந்தநிலையில் ரெஹானா பாத்திமா என்ற பெண் முதலில் சபரிமலை செல்ல முயன்றார், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்ட அவர் பக்தர்களின் கடும் எதிர்ப்பை தொடர்ந்து கோவிலுக்குள் செல்லாமல் திரும்பினார், இந்த நிலையில் 2019 ஜனவரி 2 ம் நாள் அதிகாலையில் பிந்து, துர்கா என்ற இரு பெண்கள் மாறுவேடத்தில் கோவிலின் பின்புறம் வழியாக அழைத்து சென்று கேரள அரசு தாங்கள் சாதித்து விட்டதாகவும் தீர்ப்பு உறுதியானதாகவும் கொண்டாடியது.

இந்நிலையில் சபரிமலை கோவிலுக்கு செல்ல நினைத்த, சென்ற பெண்கள் எவ்வாறு இருக்கிறார்கள் என்ற செய்தி இப்போது வெளியாகியுள்ளது,
ரெஹானா பாத்திமா என்ற பெண் தான் வகித்த அரசு வேலையை இழந்தார், அத்துடன் சொந்த குழந்தைகளை பாலியல் ரீதியாக புகைப்படம் எடுத்ததாக கைது செய்யப்பட்டு சிறை சென்றார், பாலியல் சமத்துவத்தை நிலைநாட்ட ஐயப்பன் கோவிலுக்குள் செல்வதாக நினைத்தவர், பாலியல் குற்றசாட்டு வழக்கில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இவர் சொந்த வீட்டினை இழந்து தற்போது வாடகை வீட்டிற்கு இடம்பெயர்ந்துள்ளார்.

பிந்து – இந்த பெண் ஐயப்பன் கோவிலுக்குள் சென்ற கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர், இவர் தனது சொந்த குடும்பத்தினரால் அடித்து விரட்டபட்டதோடு அவரது கணவர் இவரிடம் விவாகரத்து கோரியுள்ளார், மேலும் சொந்த பிள்ளைகளே இவரை விட்டு பிரிந்து சென்றுள்ளனர், நான் பெரும் தவறுசெய்துவிட்டேன் என் குடும்பத்தை இழந்துவிட்டேன் என என பிந்து துர்கா என இருவரும் கதறி வருகின்றனர்.

அத்துடன் சபரிமலை விவகாரத்தில் பெண்களை ஐயப்பன் கோவிலுக்குள் அழைத்து சென்றே தீருவோம் என போட்டி போட்டி செயல்பட்ட கம்யூனிஸ்ட் கட்சி இப்போது பெரும் சிக்கலில் உள்ளது அக்கட்சியின் மூத்த தலைவர் கொடியேறி பலாகிருஷ்ணனின் இரு மகன்களும் போதை பொருள், பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

எல்லாவற்றிற்கும் மேலாக கம்யூனிஸ்ட் அரசு தங்க கடத்தல் வழக்கில் சிக்கி பெரும் சிக்கலை சந்தித்து வருகிறது, அம்மாநில முன்னாள் முதன்மை செயலாளர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கபடும் சூழல் நிலவி வருகிறது, முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி பெண்களை சபரிமலைக்குள் கேரளா அரசாங்கம் அனுமதிக்காது என நீதிமன்றத்தில் பிராமண பத்திரம் தாக்கல் செய்தார், ஆனால் கம்யூனிஸ்ட் அரசு பெண்களை அனுமதிப்போம் என்று தங்கள் முடிவை மாற்றி கொண்டதால் நீதிமன்றமும் மாநில அரசின் நிலைப்பாட்டை கருத்தில் கொண்டு தீர்ப்பு வழங்கியது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவங்களை சுட்டிக்காட்டி கடவுள் இருக்கான் என்று சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *