பேருந்து ஓடவில்லை பதற்றம்!!!
பேருந்து ஓடவில்லை பதற்றம்
போராட்டம்: சென்னையில்
பதற்றம்- பாமகவினர் கைது
வன்னியர்களுக்கு 20% இடஒதுக்கீடு
கோரி பாமக சார்பில் இன்றுசென்னையில்
போராட்டம் நடைபெற்று வருகிறது.

சென்னை மாநகரின் 8 நுழைவு
வாயில்களிலும் 5000க்கும் மேற்பட்ட
போலீசார் குவிக்கப்பட்டு, பாமகவினர்
கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால்,
பாமகவினருக்கும், போலீசாருக்கும்
இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதால்
பதற்றம் உருவாகியுள்ளது. மேலும்,
போக்குவரத்து கடுமையாக
பாதிக்கப்பட்டுள்ளது.
லேப்டாப் மடியில் வைத்து பயன்படுத்துவதால் ஆபத்து !!!
லேப்டாப்பை மடியில் வைத்து
பயன்படுத்துவதால் ஆண், பெண்
இருவருக்கும் சருமப் புற்றுநோய்,
குழந்தையின்மை போன்ற பிரச்சனைகள்
வர வாய்ப்பு உள்ளது.
சரியாக
உட்காரவில்லை என்றால் கழுத்து வலி,
முதுகு வலி போன்றவை ஏற்படும்.
லேப்டாப்பில் இருந்து வரும் வெளிச்சம்
கண்களை பாதித்து தூக்கமின்மை
ஏற்படுத்தும். எனவே முடிந்தவரை
லேப்டாப்பை மடியில் வைத்து உபயோகம்
செய்யாமல் இருப்பது சிறந்தது.
அடுத்த மாதம் முதல்
கொரோனா தடுப்பூசி – மகிழ்ச்சி
அறிவிப்பு
கொரோனா நோய் தொற்று
தீவிரமடையாமல் தடுப்பதில் 100%
வெற்றி அளிக்கும் தடுப்பூசியை
தயாரித்து உள்ளதாக அமெரிக்க
மருந்து நிறுவனமான மாடர்னா
தெரிவித்துள்ளது.
மேலும், அடுத்த மாதமே
அமெரிக்கர்களுக்கு தடுப்பூசி போடப்படும்
என அமெரிக்க தேசிய ஒவ்வாமை &
தொற்று நோய் ஆய்வுக் கழக இயக்குநர்
அந்தோணி பவுசி தெரிவித்துள்ளார்.
விரைவில் உலகம் முழுவதும் மக்கள்
பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும்
என்றும் தெரிவித்துள்ளது.