பாஜக வாகனத்தை மறித்த கம்யூனிஸ்ட் கட்சியினர் ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து கொடுத்த பதிலடி!! வீடியோ உள்ளே!!!

பாஜக வாகனத்தை மறித்த கம்யூனிஸ்ட் கட்சியினர் ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து கொடுத்த பதிலடி!! வீடியோ உள்ளே!!!

கொரோனா காரணமாக நாடு முழுவதும் அனைத்து பணிகளும் பாதிக்கப்பட்டன. இப்போதுள்ள சூழலில் கொரோனாவின் தாக்கம் சற்று குறைந்துள்ளது.
இந்நிலையில் கேரளாவில் உள்ளாட்சி தேர்தலை நடத்த அம்மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்து இருக்கிறது அதன்படி டிசம்பரில் 3 கட்டங்களாக தேர்தல் அம்மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்து, அதற்கான தேதியையும் அறிவித்தது.

டிசம்பர் 8ம் தேதி முதல் கட்ட தேர்தலும், 10 மற்றும் 14ம் தேதிகளில் முறையே 2 மற்றும் 3ம் கட்ட தேர்தலும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது வாக்குகள் அனைத்தும் டிசம்பர் 16ம் தேதி எண்ணப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது, இந்நிலையில் களத்தில் ஆளும் கம்யூனிஸ்ட் எதிர்க்கட்சியான காங்கிரஸ், பாஜக ஆகியவை களத்தில் இறங்கியுள்ளன.

கடந்த நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சியான கம்யூனிஸ்ட் கட்சி படு தோல்வியை சந்தித்தது, பாஜக வாக்குகளை பெற்றதே தவிர வெற்றியை பெற முடியவில்லை, காங்கிரஸ் கட்சி கேரள நாடாளுமன்றத்தில் அதிக இடங்களை கைப்பற்றியது, ஆனால் இந்த முறை உள்ளாட்சி தேர்தல் என்பதால் தேர்தல் நடைமுறையே மாறிவிட்டது.

ஆளும் கம்யூனிஸ்ட் VS காங்கிரஸ் என்று இருந்த போட்டி கம்யூனிஸ்ட் VS பாஜக என மாறிவிட்டது, அதிலும் குறிப்பாக பல்வேறு ஊராட்சி பகுதிகளில் பாஜக இளம் வயதுடைய பெண்களை வேட்பாளர்களாக களத்தில் இறங்கியுள்ளது, அத்துடன் கம்யூனிஸ்ட் கட்சியினரால் பாதிக்கப்பட்டு குழந்தையை இழந்த பெண் என பலரை தேர்வு செய்து களத்தில் இறங்கியுள்ளது.

இது ஒருபுறம் இருக்க பாஜக பெண் வேட்பாளர் பாஜக சார்பில் பிரச்சாரம் செய்ய கிராமத்திற்கு சென்றபோது அங்கு எதிர்வேட்பாளராக இருக்கும் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள் பாஜக பெண் வேட்பாளரின் வாகனத்தை தடுத்து நிறுத்தியதுடன் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் இரண்டு தரப்பிற்கும் மோதல் போக்கு உண்டானது.

அமைதியான முறையில் பிரச்சாரம் செய்யவந்த பாஜக வேட்பாளர் தாக்கப்பட்ட செய்தி பக்கத்து கிராமங்களிலும் பரவியது, இதையடுத்து அடுத்த நாள் சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவிற்கு 7 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் சாலை நெடுகிலும் தாமரை சின்னத்தை வரைந்து எங்கள் ஓட்டு தாமரைக்கு என்று எழுதியுள்ளனர்.

இந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது, வாகனத்தை மறைத்து மோதலில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு ஊர்மக்கள் கொடுத்த வித்தியாசமான பதிலடி கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு கிடைத்த மிக பெரும் பதிலடியாக பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close Bitnami banner
Bitnami